தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வீதி போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக வாகன சாரதிகள் தபாலகங்களில் தண்டப்பணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இது தொடர்பாக சாரதிகளுக்கு விநியோகிக்கப்படும் தண்டப்பண பத்திரம் தொடர்பாக விசேட சலுகையொன்றை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
தபாலகங்களில் தண்டப்பணத்தை கட்ட முடியாது போகுமிடத்து சாரதிகள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டப்பத்திரத்தில் குறிப்பொன்றை இட்டு பொறுப்பதிகாரியின் கையொப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறும். இதனை தொடர்ந்து அந்த தண்டபத்திரங்களை நீதிமன்றத்திற்கு அனுப்பாதிருக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த தண்டபணத்தை சாரதிகள் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments