தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் நேற்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.
இதனால் இன்றைய தினத்திலும் தமது பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் மூன்று கோரிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: