Home » » பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழகங்களில் இம்முறை அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்திற்குள் பதிவு நடவடிக்கைகள் முடிவடையவிருந்த போதும் அதனை ஜுலை 7ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது தபால் ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணாமாக மாணவர்களுக்கு பதிவு இலக்கங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112695302 அல்லது 0112695301 என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட தொலைபேசி இலக்கங்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |