குருக்கள்மடம் பேரூரின் வரலாறு

Friday, August 30, 2013

                                             
                   குருக்கள்மடம் பேரூரின் வரலாறு 

       இந்து சமுத்திரத்திலே முத்து என இலங்கும் ஒரு தீவாக காணப்பட்டதால் அது இலங்கை என்று பெயர் பெற்றது. அது இரத்தினதுவீபம் இலங்காபுரி ஈழம் என்ற பல்வேறு பெயர்களால் சிறப்புப் பாராட்டப்பட்டு உயர்ந்து காணப்படுகின்றது. ஈழம் என்ற சொல் சிலப்பதிகாரத்திலே இளங்கோ அடிகளால் குறிப்பிடக்கூடிய அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகும். இது ”மெமோறியாக்” கண்டத்தின் (தமிழரது கண்டம்) ஒரு சிறு துண்டாக ஆய்வாளரால் சுட்டிக்காட்டப்படுகிறது. குமரிக் கண்டமெனவும் இது குறிப்பிடப்படுகின்றது. இவை கடற்கோளால் அழிக்கப்பட்டு ஒரு மரகதத்தீவாக ஈழம் விளங்குகின்றது. 

      ஈழ நாட்டின் கிழக்குப் பகுதி கொட்டும் வளங்களின் பெருநிலப்பரப்பாக விளங்குகிறது. மட்டக்களப்பெனும் தேன்நாடு இதன் தென்பால் பல்வளமும் மலிந்து காராளர் கவிபாடும் நிலமாகக் காணப்படுவது குருக்கள்மடம் எனும் பேரூராகும். இது கார்வளமும் கலைவளமும் பொருள் வளமும் நீர்வளமும் நிலவளமும் புலவர்களது புகழ்வளமும் கொண்ட ஒரு புண்ணிய இடமாகும். இது தமிழர்களின் கலாசார மாண்பியல்புகளையும் தன்னகத்தே தாங்கித் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

மட்டக்களப்புத் தமிழகத்தை ஒருங்கே பிரதிபலிக்கும் பழம் தமிழ் கிராமம் குருக்கள்மடமாகும். கிழக்கே வங்களா விரிகுடா மேற்கே மீன்பாடும் மட்டக்களப்பு வாவி தெற்கே கற்புக்கரசியாம் கண்ணகித்தாய் அமைந்துள்ள செட்டி ஊர்த்திருத்தலம் வடக்கே மாணிக்கப்பிள்ளையார் பள்ளி கொண்ட கிரான்குளம் ஊரும் இதன் எல்லைகளாகும். இவ் எல்லைகளுக்குட்பட்டு கிழக்கு மேற்காக 2 கி.மீ. கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மேற்குப் பகுதியில் தேன் நிறைந்த செந்தாமரைக் குவளை மலர்கள் நிறைந்த நீர்க்குளமும் வாளை தாவுறு வாழைத் தோட்டங்களும் இக்கிராமத்தின் பணப்பிராம் கற்பன் புற்களும் வானுயர வளர்ந்து காய்க்கின்ற தென்னை கமுகம் சோலைகளும் கிண்ணை மரக்காடுகளும் எம் அரும் பெரும் செல்வமாம் நெல் மணி வயல்களும் அழகு செய்கின்றன.

இப்பிரதேசம் வண்டலும் சேறும்நிறைந்த வளமுள்ள நிலமாக காணப்படுகின்றது. இடைநடுவே காணப்படும் முல்லை நிலமோ சீதேவியாம் நீர் வெற்றிலைத் தோட்டங்களும் முருங்கை இன மரங்களும் அதனை செழுமையாக்கும் பசுக்கூட்டங்களும் முந்திரிகைத் தோட்டங்களும் வேம்பு சமண்டலை மரங்கள் முதலான இயற்கைத் காடுகளும் மேலும் சிறப்புச் செய்கின்றன. இப்பிரதேசத்தின் நிலம் வளம் குறைந்த வெண்மணத்திடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கே காணப்படும் நெய்தல் நிலமானது அழகிய மணத்திடல்களையும் இலங்கையில் பல பாகங்களிலும் இருந்து வந்து மீன்பிடிக்கும் இயற்கை வாய்ந்த தளத்தினையும் தன்னகத்தே கொண்டதாக மிளிர்கிறது. இன்னும் இக்கிராமத்தின் கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாக் கடலில் குறிப்பிடப்படும் சிறய துறைமுகம் அமைந்திருந்ததாக அறிய முடிகின்றது. இந்தியாவிலிருந்து இங்கு மக்கள் வருவதற்கும் வாணிபம் செய்வதற்கும் இத்துறைமுகம் பயன்பட்டுள்ளது. 

       புவியியல் மாறுதல் காரணமாக காலப்போக்கில் அழிந்து போயிருந்தும் இன்றும் இந்த இடத்தை ”தோணா” என்று வழங்கி வருவது சிறப்பிற்குரியது. இதுபோலவே தான் மேற்கே பாயும் மட்டக்களப்பு வாவியின் இறங்கு துறையாக குருக்கள்மடம் - அம்பிளாந்துறை மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக்கிராமத்தினை ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயமும் ஸ்ரீ ஐயனார் ஆலயமும் ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயமும் ஸ்ரீ முருகன் ஆலயமும் மாரியம்மன் பிள்ளையார் நாகதம்பிரான் ஆலயங்களும் கிறிஸ்தவ ஆலயமும் அணி செய்து மேலும் இக்கிராமத்தின் புகழுக்கு மெருகூட்டுகின்றன.

குருக்கள்மடம் பேரூரின் இலச்சினை



எமது இலச்சினையின் உட்பொருள்


ஓம் -                    தொடக்கமும் ,முடிவும் , இறைநாமம், பிரணவம் பொருள்
வட்டம் -             நிறைவு , இணைப்பு , ஏகாந்தம்
சூரியன் -           நினலயானது , தெய்வீகம், கொடிநிலை
கோபுரம் -         இறைபக்தி ,உயர்ந்த எண்ணம்
ஏடு -                   கல்வி ,கற்பு ,அறிவு ஈடேற்றம்
வெற்றிலை -  இலட்சுமிகரம் , முகவெற்றிலை, வரவேற்பு
மடம் -               அறிஞர்கள் ஒன்று கூடும் இடம் கூடல் சங்கம்
நெற்கதிர் -     தானியவிருத்தி, உழவர் , பொருளாதாரம், வசீகரம்
சந்தணக்கிண்ணம் - வரவேற்பு,  முகமலர்ச்சி,  உபசரணையுடன் கூடிய விருந்தோம்பல் 
கடல் -             இயற்கைவளம், ஆழ்ந்த அறிவு , வள நிறைவு
தென்னை -   ஜீவகாருண்யம்  , பிணிதீர்ப்பன, பரியுபகனி
வாழை -         முக்கனிவளம் , சந்தானம்
குருவருளே திருவருளாய் - குருபக்தி
நிறைந்த பதி - மனிதன் பிறந்து,  வளர்ந்து , கல்வி அறிவு பெற்று,  இல்லறத்தின் நல்லறம்பேணி,  விருந்தோம்பி குருபக்தியோடு  இறையருளால் மேலோங்கி யாவும் உணர்ந்து அதன் வாயிலாகக் கர்மமும் , ஞானமும் , பக்தியும் யோகமும் , ஒன்றுசேர நிறைவாக உள்ள பதி.

குருக்கள்மடம் - வேதார்ணியத்தில் இருந்து வருகை தந்த குரு என்று அழைக்கப்படும் உலக குருநாதர் இங்கு வந்து மடம் அமைத்து அதிலே தங்கியிருந்து ஆலயமும் அமைத்து வழிபாடாற்றி மக்களை நல்வழிப்படுத்தியமையால் குருக்கள்மடம் எனப் பெயர் பெற்றது. 
READ MORE | comments

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீப்பாய்தல் நிகழ்வு நேரடியாக


பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீப்பாய்தல் நிகழ்வு நேரடியாக 




READ MORE | comments

மலைப்பாம்புக்கு உணவாக சென்ற நாய் மீண்டும் வெளிவரும் காட்சி.....

Wednesday, August 28, 2013

மலைப்பாம்புக்கு உணவாக சென்ற நாய் மீண்டும் வெளிவரும் காட்சி.....

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |