ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் விசேட திட்டம் அறிவிப்பு !
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருட காலத்திற்கு இரத்து செய்ய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுதாபனங்கள் மற்றும் சபைகளுக்கான வாகன இறக்குமதிகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரச ஊழியர்களுக்காக விநியோகிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதிக்குள் கடன் அனுமதி பத்திர விநியோகிக்க நடவடிக்கைகளை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐபிரிட் வாகனங்களுக்கான முற்கொடுப்பனவு முறைமையின் கீழ், வாகன பெறுமதியில் 50 வீதத்தை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குளிர்சாதனபெட்டிகள், குளிரூட்டிகள்,தொலைக்காட்சிகள், வாசனை திரவியங்கள், கையடக்கத் தொலைபேசிகளும், ஏனைய தொலைபேசிகளும், சலவை இயந்திரங்கள், பாதணிகள் மற்றும் டயர் இறக்குமதியின் போது, அதன் பெறுமதியில் 100 வீதத்தை முதலீடு செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கம் ரூபாவின் பெறுமதி மாற்று விகிதம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அதன்பிரகாரம் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி!
மலையகத்தில் தொடரும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரம் முழுவதும் வெள்ளப் பொருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் பெய்த அடை மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நாவலபிட்டி நகரபகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாக பாராமரிக்கப்படாமையால் வெள்ள நீர் நிரம்பி வருவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு இரவு விடுதியில் பிரபல நடிகருக்கு கத்திக்குத்து!
பிரபல சிங்கள நடிகர் திலக் ஜயவீர கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். நுகேகொடை - ஏழாம் தூண் பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விடுதிக்குள் வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|
இதில் காயமடைந்த அவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். திலக் ஜயவீரவின் வயிற்றுப் பகுதியில் மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
முதல் எரிவாயு மின் நிலையம் அம்பாந்தோட்டையில்!
இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது.
போதநாயகி திருமணமான காலம் முதல் அவருடைய கணவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் தாயார் தகவல்
உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கண்டறியப்பட வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்தப் பொராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது, போதநாயகியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்ற அவரின் கணவன் செந்தூரன் மரணம் குறித்து அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு சென்றார் எனவும், சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என முரண்பட்டு இறுதி கிரியைக்கும் சமூகமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் என போதநாயகியின் தாயார் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார்.(15)
ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி!
இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.(15)
ஜனாதிபதியின் திட்டத்தைக் குழப்பிய மேற்குலக நாடுகள்!
Friday, September 28, 2018
ஐ.நா பொதுச்சபையில், போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரைக் காப்பாற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில் கைவிட நேரிட்டதாகவும் அதற்கு மேற்குலக அழுத்தங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது.
|
ஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றினை முன்வைக்கப் போவதாக வெளிவந்த செய்திகளையடுத்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் உஷாரடைந்தன.இந்த பொறிமுறையில் – போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரும்பாலான படையினரும் சில அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு ஒன்றின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் ஏது உள்ளதாக அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன.
இந்த பொறிமுறையின் கீழ் சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான படையினரை விடுவிப்பது என்பதை ஏற்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்படி செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணைக்கு எதிரானதாக அது அமைந்து விடும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பதில் தூதுவர் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோர் பம்பரமாய் செயற்பட ஆரம்பித்தனர். ஜனாதிபதி மைத்திரியை நேரடியாக சந்தித்த அவர்கள் இது தொடர்பான தங்களது அதிருப்தியை தெரிவித்ததுடன் , ஜீ எஸ் பி பிளஸ் மற்றும் இதர விடயங்களில் இந்த விவகாரம் செலுத்தும் தாக்கம் குறித்தும் எடுத்துக் கூறினர் .
இதனையடுத்து அமெரிக்கா புறப்பட முன்னர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணிலுடன் நீண்ட மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி , முன்னதாக இதனை அமைச்சரவையில் கூறியிருந்தாலும் அதனை மாற்ற வேண்டிய நிலைமை குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்.
அப்போது கருத்து வெளியிட்ட ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் , அரசியல் கைதிகள் விடுதலை என்ற போர்வையில் போர்க்குற்றச்சாட்டு உள்ள படையினர் மீதான பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் நிறைவேறினால் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக கோடி காட்டியிருக்கிறார். இதன் பின்னர் ஜனாதிபதியின் அந்த விசேடபொறிமுறைத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
|
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைகிறது! -சிவமோகன் எம்.பி
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கத்தினால் அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
|
நேற்று மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அங்கு கைதிகளின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் அவர்களின் நிலைமைகளையும் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 15 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியில் கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தேன். மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் உணவு இன்றி தண்ணீர் மற்றும் ஜீவனியை மாத்திரமே உட்கொண்டு தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மேலும் நாட்கள் செல்லுமானால் நிலைமை மேலும் மோசடையும்.
சிறைகளிலுள்ளவர்களுக்கு ஆகக்கூடிய தண்டனை 10 வருடம் அரசாங்கமானது இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள். இங்கு நடைபெறுவது அப்பட்டமான அநீதி 80முதல் 100இற்கும் இடைப்பட்ட கைதிகள் குறுகிய காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
|
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதி கோரி, இன்று பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
|
மருத்துவ உதவியையும் நிராகரித்து அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!
தமது விடுதலை தொடர்பில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுவதால், இன்று முதல்,தமக்கான மருத்துவ உதவிகளையும் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அநுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள், தெரிவித்துள்ளனர்.
|
அரசாங்கத்துக்கு அரசியல் கைதிகள் வழங்கியுள்ள இறுதி சிவப்பு எச்சரிக்கை இதுவெனவும், இவர்களின் விடுதலை தொடர்பில் அசமந்தப்போக்குத் தொடருமாயின், நீராகாரத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புத் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அசமந்தப் போக்கு தொடருமாயின் நாட்டில் ஏற்படப்போகும் அரசியல் கொந்தளிப்புக்கு, அவர் முகங்கொடுக்கத் தயாராக வேண்டும்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகள், 14 நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எழுந்து நிற்கவும் பேச முடியாத நிலையிலும் அவர்களின் உடல் நிலை படுமோசடைந்துள்ளது.
தொடர்ந்து 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை படுமோசடைந்திருக்கும் இவர்கள், மருத்துவ உதவிகள், நீராகாரங்களைத் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
வாழ்க்கையின் பாதி நாள்களை சிறைச்சாலையில் கழித்த அவர்கள், மீதி நாள்களையாவது வாழ விரும்பி ஆரம்பித்திருந்த போராட்டம், அவர்களின் மரணத்தில் முடிவடைந்து விடுமோ என்ற பயம், ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் தொற்றியுள்ளதாகவும் இதன்போது அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக்கைதிகள் தொடர்பான முடிவை, 2 அல்லது 3 நாள்களுக்குள் வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், சட்டமா அதிபரால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், அவரின் வாக்குறுதியை நம்புவதற்கு அரசியல் கைதிகள் தயாராக இல்லை என, அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும், அவர்களுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே எனவும் தெரிவித்த அவர், ஆகவே ஜனாதிபதியும் அவர்களை ஏமாற்றிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
|
முச்சக்கர வண்டிகளில் இது கட்டாயம் : ஒக்டோபர் முதல் சட்டம் அமுல்
பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கட்டண மீற்றர் பொறுத்தப்பட்டிப்பது கட்டாயமானதாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருமென அந்த சபையின் தலைவர் சிசிர கொந்தாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரை பொறுத்துவதற்காக அதன் உரிமையாளர்களுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மேலும் காலம் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர் அடுத்த மாதம் முதல் இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணிக்கு கட்டண விபரங்கள் தொடர்பான ரிசிட் ஒன்றை விநியோகிக்கும் நடைமுறையொன்றும் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. -(3)
இந்த சட்டம் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருமென அந்த சபையின் தலைவர் சிசிர கொந்தாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரை பொறுத்துவதற்காக அதன் உரிமையாளர்களுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மேலும் காலம் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர் அடுத்த மாதம் முதல் இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணிக்கு கட்டண விபரங்கள் தொடர்பான ரிசிட் ஒன்றை விநியோகிக்கும் நடைமுறையொன்றும் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. -(3)
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வலியுறுத்தினார் சம்பந்தன்! - வாக்குறுதியோடு அனுப்பியது அரசு
Thursday, September 27, 2018
ஜே.வி.பி. கலவரங்களிலும், 1983 கலவரங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததைப் போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் - நீதி அமைச்சர் -சட்டமா அதிபர் ஆகியோருடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
|
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுநடத்தினர். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மீண்டும் பேச்சு நடத்தி அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானம் எடுப்பதாக, அரச தரப்பு, எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.
|
பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு? பிரசவ நேரத்தை எதிர்பார்த்த திக் திக் நிமிடங்கள்!
ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த செய்தி இறுதி தருணங்களை அடைந்து அனைவரையும் திக் திக் மனநிலைக்கு அழைத்து சென்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது :-
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரையில் குழந்தை இல்லை.
குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்துவந்தார்.
இந்நிலையில் கோகிலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கோகிலாவோ அதனை ஏற்கவில்லை.
தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளும் வந்தது. அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.
தகவல் அறிந்த லாலாப்பேட்டை பொலிஸ் இன்ஸ் பெக்டர் கோமதி தலைமையில் ஏராளமான பொலிசார் அங்கு வந்தனர். பூசாரி சரியாக நள்ளிரவு 12.20 மணிக்கு நாகப்பாம்பு பிறக்க போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.
இதற்கிடையே பொலிசார் 108 அம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
மழையினால் மன்னார் புதைகுழி எச்சங்கள் பாதிக்கப்படும் ஆபத்து!
மன்னார் புதைகுழி அகழ்வு பணி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் தற்போது மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றது . கடந்த திங்கட்கிழமை மழை பெய்துள்ளது.
|
அதனால் குறித்த வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த ஏற்பாடுகளும் ஓழுங்கின்றி காணப்படுவதனால் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சேதப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது . எனவே உரிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
|
கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதியின் உரை!
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தில் ஆற்றுவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த உரை இறுதிநேரத்தில் மாற்றப்பட்டு, திருத்தப்பட்ட உரையையே ஆற்றியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
|
ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச் சபைக்கு சென்றுள்ள அமைச்சர் மனோ கணேசன், அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால் இறுதி தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விபரங்களை பகிரங்கமாக கூறமுடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச் சபையில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிடாது,புதிய கண்ணோட்டத்துடன் பார்க்குமாறு உலக தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐ.நா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்த போது, தன்னை அழைத்த ஜனாதிபதி மைத்திரி, தனது தோளில் கைகளை போட்டவாறு, அமைச்சர் மனோ கணேசன் அவர்களே என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்தி தானே?" என்று கூறியதாக அமைச்சர் மனோ தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்துவரும் மைத்ரிபால சிறிசேன, குறித்த தீர்மானத்தை திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் யோசனையொன்றை முன்வைப்பதாக கொழும்பில்வைத்து அறிவித்திருந்தார்.
இதற்கமைய ஐ.நா உரையின் போது இந்தக் கோரிக்கையை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.
வழமையாக சிறிலங்காவிற்குள் பேசிவரும் கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மனோ கணேசன், சர்வதேசம் சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
எனினும் அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று கூறவில்லையே என்று தான் அவரிடம் குறிப்பிட்டதுடன், அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் என கிண்டலாக கூறியதாகவும் மனோ தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல என்றும் குறிப்பிட்டுள்ளஅமைச்சர் மனோ, இறுதி தினங்களில் அவரது உரை வடிவம் மாற்றப்பட்டதாகவும், அதற்கு திரைமறைவில் பல விடையங்கள் நடந்தேறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவை தொடர்பான விபரங்களை பகிரங்கமாக கூற முடியாது என்றுதெரிவித்திருக்கின்றார்.
எவ்வாறாயினும் டுவிட்டர் பதவில் , பெரும்எதிர்பார்ப்புடன் இருந்த சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்களை மைத்ரிபால சிறிசேனவின் உரை ஏமாற்றமடையச் செய்து விட்டதாக அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.
|
இலங்கைக்கு உதவுவதாக மலேசியப் பிரதமர் உறுதி!
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமடிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
|
இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருநகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்காக புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் மலேசிய பிரதமர், ஜனாதிபதிக்கு இதன்போது உறுதியளித்தார்.
|
புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு
றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனார்.
இன்று காலை 07.55 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரத பாதையின் குறுக்காக கடந்த சென்ற போதே குறித்த நால்வரும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்தது!
4 நீள வாளுடன் மாட்டினார் இளைஞர்! - தாய் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து கைது
சுமார் 4 அடி நீளமுடைய கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனின் அச்சுறுத்தல் தொடர்பில் தாயார் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த பொலிஸாரே வாளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்தனர்.
|
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார். “கோண்டாவில் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது மகனால் தனக்கு அச்சுறுத்தல் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடன் மகன் முரண்படுவதாகவும் அதனால் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குடும்பப் பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது மகனிடம் வீடு தேடிப் பொலிஸார் சிலர் விசாரணைக்குச் சென்றிருந்தனர். அங்கு கூரிய வாள் ஒன்று மீட்கப்பட்டது. அதனை தனது உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவேண்டும்” என்று பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
“சந்தேகநபர் அயலில் உள்ள ஆலயத்தின் வழிபடுவோர் சபை உறுப்பினராக உள்ளார். அந்த ஆலயத்தில் அண்மையில் நவராத்திரி வழிபாடுகள் ஆரம்பமாக உள்ளன. நவராத்திரி நிறைவு நாளின் மானம்பூத் திருவிழா இடம்பெறவுள்ளது. அந்தத் திருவிழாவின் போது வாழைவெட்டு உற்சவம் இடம்பெறும். அதற்குப் பயன்படுத்தும் ஆலயத்துக்குரிய வாள்தான் பொலிஸாரால் சந்தேகநபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. அந்த வாளை தோய்ந்து (சீரமைத்து) அதனை ஆலயத்துக்கு வழங்க என வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திருந்தார். சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வே.விஜயரட்ணம் மன்றுரைத்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபரை வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
|
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து மூன்று நாட்களுக்குள் முடிவு! - சட்டமா அதிபர்
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதமை மற்றும் காலதாமதங்கள் குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாக, சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் பாரிய குற்றங்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்வது கடினமானது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி.யிடம் இருந்த அரசியல் கைதிகளின் விபரங்களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
|
சிறிலங்கா விவகாரத்தில் அடுத்து என்ன?- ஐ.நாவில் இடம்பெற்ற உப மாநாடு!
Tuesday, September 25, 2018
சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையவுள்ள நிலையில் அனைத்துலகத்தின் அடுத்த நிலைப்பாடு என்பதனை கேள்விக்குட்படுத்தும் வகையில் உப மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது.
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் அவை ஆகியன பசுமைத்தாயகம் ஊடாக ஒருங்கு செய்திருந்தன. ஆங்கிலம் பிரென்சு மொழியில் இடம்பெற்றிருந்த இம்மாநாட்டில் பிரான்சு-தமிழ் இளையோர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட காணொளி விபரணம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது.
Mr Lorenzo Fiorito அவர்கள் மாநாட்டை தொகுத்திருக்க வள அறிஞர்களான Mrs Shivani Jegarjah, Mrs Sowjeya Joseph, Mrs Sharuka Thevakumar, Hon Minister Manivannan ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்துவன் ஊடாகவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிறிலங்காவை பொறுப்புக்காண வைக்க முடியும் என்ற கருத்து அனைத்துலக நாடுகள் நோக்கி முன்வைக்கப்பட்டது.
|
புலமைப் பரிசில் பெறுபேறு அக்டோபர் 5இல் ?
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதியளவிலேயே வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது விடைத்தாள் மதீப்பீட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றை 5ஆம் திகதியளவில் வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் இதில் 355,326 பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
தற்போது விடைத்தாள் மதீப்பீட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றை 5ஆம் திகதியளவில் வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் இதில் 355,326 பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
மஹிந்தவை குழுவில் சேர்த்ததற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு!
அனைத்து தாய்மார்களுக்கும் அவசர எச்சரிக்கை: குழந்தையின் தொட்டிலைத் தேடிவரும் மிகக் கொடிய பாம்புகள்!
குயின்லாந்தில் உள்ள வீடொன்றில் குழந்தையை உறங்கச் செய்யும் தொட்டிலில் உலகின் கொடிய விசத்தினையுடைய பாம்பு ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் உள்ள குழந்தையின் தொட்டிலில் கிழக்கத்தைய பழுப்பு பாம்பு (Eastern Brown Snake) காணப்பட்டுள்ளது.
குறித்த தொட்டிலில் தனது குழந்தையை உறங்க வைப்பதற்காக அறையின் உள்ளே நுழைந்த தாய் தொட்டிலில் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்தார்.
ஒரு நீளமான கிழக்கத்தைய பழுப்பு பாம்பு அந்த தொட்டிலில் இருந்த துணியின் கீழிருந்து நெளிந்துகொண்டிருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போன குறித்த பெண் அறையை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து பேசிய அலீஷா மிட்ச்லி எனும் அந்த தாய்,
“அது எவ்வாறு அறைக்குள் வந்தது என தெரியவில்லை. ஆனால் யன்னலால்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தொட்டிலில் பாம்பு இருந்த நிலையை என்னால் வார்த்தையால் விளங்கப்படுத்த முடியவில்லை. அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.” என்றார்.
கருப்பு மாம்பா பாம்புகளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது கொடிய விசத்தினைக் கொண்ட கிழக்கத்தைய பழுப்பு பாம்புகள் குயின்லாந்தில் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் வருடாவருடம் பல எண்ணிக்கையானோர் தீண்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் பாம்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதுடன் வீட்டில் உள்ள கதவுகளை எந்த நேரமும் மூடி வைக்குமாறு அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை குழந்தையை உறங்க வைக்கும் தொட்டில் தொடர்பில் மிகுந்த அக்கறை எடுக்குமாறும் அவற்றுள் காணப்படும் சிறுநீர் தோய்ந்த துணிகளின் மணம் விஷப் பாம்புகளை ஈர்க்கும் தன்மையினைக் கொண்டவை என்பதனால் கூடிய கவனமெடுக்குமாறும் தாய்மார்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண மண்ணையும் பிள்ளைகளையும் நீங்கள் பாதுகாக்கவேண்டும்
ஆசிரியராகிய நீங்கள் கிழக்கு மாகாண மண்ணையும் பிள்ளைகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் அவர்களை பெரிய வைத்தியர்களாகவோ பெரிய பொறியலாளராகவோ வேறு துறைகளில் விற்பனர்களாவோ மாற்றவேண்டாம் ஆக்குறைந்தது சமூகத்தில் வாழகூடிய மனநிலை பாதிக்காதவர்களாக நீங்கள் மாற்றியமையுங்கள். என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்கள் தெரிவித்தார்
சென்ற வருடம் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறு பேற்றின் பின்னடைவினை ஆராய்ந்து அதனை உயர்வடைய செய்வது சம்பந்தமாக பட்டிருப்பு கல்வி வலய அதிபர், பிரதியதிபர்,பகுதித்தலைவர்,ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் களுதாவளை கலசார மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று பாடசாலையிலே கற்கின்ற மாணவர்களில் சிலர் தங்களின் வாழ்வினை தொலைத்தவர்களான மனநிலையுடையவர்களாக காணப்படுகின்றனர். போதைப்பொருள் பாவனைக்குட்பட்ட மாணவனிடம் நான் வினாவியபோது இந்த பாடசாலையை எனக்கு பிடிக்கவில்லை இந்த பாடசாலை அதிபரை, ஆசிரியரை எனக்கு பிடிக்கவில்லை காரணம் எனது பெற்றோரிடம் என்னை ஒரே பிழைகூறிக்கொண்டு இருக்கின்றனர் இதனால்தான் நான் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்தார்.
இதற்காகத்தான் நான் மிண்டும் மன்றாட்டமாக கேட்கின்றேன் நாம் அனைவரும் பெற்றோர்கள் எமது பிள்ளைகளை நாங்களே பாதுகாக்க வேண்டும். மோசமான சிந்தனை கொண்ட ஒருசிலரின் சிந்தனை காரணமாக எமது பாடசாலைகள் பலமோசமான நிலைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது.
நாங்கள் கடந்த காலங்களை மீட்டு பார்த்து எமது காலத்தை வீணடிக்கத்தேவையில்லை நாங்கள் இதனை இன்றே மறந்து விடுவோம் அதோபோன்று மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர் ஆகிய அனைவரும் கடந்த செயற்பாடுகளை பிரட்டி பார்ததால் தொழிலை மறந்துவிடுவோம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எண்ணி அனைத்தையும் மறப்போம் ஏன் இதனை கூறுகின்றேன் என்றால். நாங்கள் அனைவரும் புதியவர்களாக நாளை பாடசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகின்றேன்.
பலதரப்பட்ட வேதனைகள், சோதனைகளுக்கு மத்தியில் எமது கஷ்ரத்தை எதிர்காலத்தின் எனது பிள்ளை தீர்த்துவைக்கும் என்ற கனவுடன் ஒரு பிள்ளையை பாடசாலை அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து பதினொரு வருடங்கள் கல்வி கற்பித்து வெறுமையாக வீட்டுக்க அனுப்பும்போது அந்த பெற்றோரின் வேதனை எவ்வாறு இருக்கும் என்பதனை ஒரு பெற்றோரின் இடத்தில் இருந்து நீங்கள் சிந்தித்து பாருங்கள.; ஒரு பிள்ளை சமூகத்தில் பின்தங்கி நிமிர்ந்து வாழமுடியாத நிலை எற்படுகின்றபோது பெற்றோராகிய நீங்கள் எவ்வாறு வேதனை அடைவீர்கள் தங்களது பிள்ளைகளை தொலைத்த எத்தனையோ பெற்றோர்கள் இன்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் ஒரு பிள்ளையை பெற்றவரின் வலி என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
எனவே எமது மண்ணையும் எமது மாணவர்களையும் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நாங்கள் வழங்கவேண்டும். இதுவே எமது தலையாய கடமையாகும் இதனைத்தான் நான் மாகாண கல்வி பணிப்பாளர் என்ற வகையிலே உங்களிடம் மன்றாட்டமாக வேண்டுவது. ஆசிரியர் தொழில் என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை அது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்குவதொன்றாகும் இதனை நாங்கள் சரியாக செய்யாவிட்டால் இறைவன் எங்களை எதிர்காலத்தில் தண்டனைக்கு உட்படுத்துவார் என்பதனை புரிந்து கொண்டு செயற்படுங்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்….பழுகாமம் நிருப
இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
மேலும் காய்ச்சல் வந்தால் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 பேர் பலியாகினர்.
அத்துடன் 38,565 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
மட்/செட்டிபாளையம் கிராமத்தில் கொள்ளையிட்ட கும்பல் காருடன் கைது !!
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் கொள்ளையிடப்பட்ட பொருட்களை வாங்கியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 31 பவுண் தங்க நகை, 2 இலட்சம் ரூபா பணம், 2 டிஜிட்டல் கமராக்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் கொள்ளையிட பயன்படுத்தப்பட்ட கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பல இடங்களில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்!
Monday, September 24, 2018
சட்டசிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
|
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மல்வத்துபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
|
கொமாண்டோ படைக்கு இராணுவத் தளபதி முக்கிய உத்தரவு!
நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கொமாண்டோபடைப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
|
கொழும்பில் உள்ள தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ம் திகதி நடத்தப்பட்டது. இதன் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், ஜனாதிபதியின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
|
Subscribe to:
Posts (Atom)