Home » » அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வலியுறுத்தினார் சம்பந்தன்! - வாக்குறுதியோடு அனுப்பியது அரசு

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வலியுறுத்தினார் சம்பந்தன்! - வாக்குறுதியோடு அனுப்பியது அரசு

ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொதுமன்­னிப்பில் விடு­தலை செய்ததைப் போன்று தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என பிர­தமர் - நீதி அமைச்சர் -சட்­டமா அதிபர் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்­தியுள்ளார்.
நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்து பேச்­சுநடத்­தினர். இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலை­வ­ருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.
இதன்­போது ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் மீண்டும் பேச்­சு நடத்தி அரசியல் கைதி­களின் விடு­தலை குறித்து தீர்­மானம் எடுப்பதாக, அரச தரப்பு, எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |