ஆசிரியராகிய நீங்கள் கிழக்கு மாகாண மண்ணையும் பிள்ளைகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் அவர்களை பெரிய வைத்தியர்களாகவோ பெரிய பொறியலாளராகவோ வேறு துறைகளில் விற்பனர்களாவோ மாற்றவேண்டாம் ஆக்குறைந்தது சமூகத்தில் வாழகூடிய மனநிலை பாதிக்காதவர்களாக நீங்கள் மாற்றியமையுங்கள். என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்கள் தெரிவித்தார்
சென்ற வருடம் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறு பேற்றின் பின்னடைவினை ஆராய்ந்து அதனை உயர்வடைய செய்வது சம்பந்தமாக பட்டிருப்பு கல்வி வலய அதிபர், பிரதியதிபர்,பகுதித்தலைவர்,ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் களுதாவளை கலசார மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று பாடசாலையிலே கற்கின்ற மாணவர்களில் சிலர் தங்களின் வாழ்வினை தொலைத்தவர்களான மனநிலையுடையவர்களாக காணப்படுகின்றனர். போதைப்பொருள் பாவனைக்குட்பட்ட மாணவனிடம் நான் வினாவியபோது இந்த பாடசாலையை எனக்கு பிடிக்கவில்லை இந்த பாடசாலை அதிபரை, ஆசிரியரை எனக்கு பிடிக்கவில்லை காரணம் எனது பெற்றோரிடம் என்னை ஒரே பிழைகூறிக்கொண்டு இருக்கின்றனர் இதனால்தான் நான் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்தார்.
இதற்காகத்தான் நான் மிண்டும் மன்றாட்டமாக கேட்கின்றேன் நாம் அனைவரும் பெற்றோர்கள் எமது பிள்ளைகளை நாங்களே பாதுகாக்க வேண்டும். மோசமான சிந்தனை கொண்ட ஒருசிலரின் சிந்தனை காரணமாக எமது பாடசாலைகள் பலமோசமான நிலைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது.
நாங்கள் கடந்த காலங்களை மீட்டு பார்த்து எமது காலத்தை வீணடிக்கத்தேவையில்லை நாங்கள் இதனை இன்றே மறந்து விடுவோம் அதோபோன்று மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர் ஆகிய அனைவரும் கடந்த செயற்பாடுகளை பிரட்டி பார்ததால் தொழிலை மறந்துவிடுவோம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எண்ணி அனைத்தையும் மறப்போம் ஏன் இதனை கூறுகின்றேன் என்றால். நாங்கள் அனைவரும் புதியவர்களாக நாளை பாடசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகின்றேன்.
பலதரப்பட்ட வேதனைகள், சோதனைகளுக்கு மத்தியில் எமது கஷ்ரத்தை எதிர்காலத்தின் எனது பிள்ளை தீர்த்துவைக்கும் என்ற கனவுடன் ஒரு பிள்ளையை பாடசாலை அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து பதினொரு வருடங்கள் கல்வி கற்பித்து வெறுமையாக வீட்டுக்க அனுப்பும்போது அந்த பெற்றோரின் வேதனை எவ்வாறு இருக்கும் என்பதனை ஒரு பெற்றோரின் இடத்தில் இருந்து நீங்கள் சிந்தித்து பாருங்கள.; ஒரு பிள்ளை சமூகத்தில் பின்தங்கி நிமிர்ந்து வாழமுடியாத நிலை எற்படுகின்றபோது பெற்றோராகிய நீங்கள் எவ்வாறு வேதனை அடைவீர்கள் தங்களது பிள்ளைகளை தொலைத்த எத்தனையோ பெற்றோர்கள் இன்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் ஒரு பிள்ளையை பெற்றவரின் வலி என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
எனவே எமது மண்ணையும் எமது மாணவர்களையும் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நாங்கள் வழங்கவேண்டும். இதுவே எமது தலையாய கடமையாகும் இதனைத்தான் நான் மாகாண கல்வி பணிப்பாளர் என்ற வகையிலே உங்களிடம் மன்றாட்டமாக வேண்டுவது. ஆசிரியர் தொழில் என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை அது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்குவதொன்றாகும் இதனை நாங்கள் சரியாக செய்யாவிட்டால் இறைவன் எங்களை எதிர்காலத்தில் தண்டனைக்கு உட்படுத்துவார் என்பதனை புரிந்து கொண்டு செயற்படுங்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்….பழுகாமம் நிருப
0 Comments