புகையிரத குறுக்கு பாதைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரத கடவைகள் மூடப்பட்டிருக்கும் போதும் குறித்த நபர்கள் பாதைக்கு குறுக்காக பயணித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சுற்றிவளைப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments