கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது.... தாய் வெளியிட்ட தகவல்

Tuesday, May 31, 2022

 பண்டாரகம -  அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது. 

கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். 

கடைக்கு சென்ற சிறுமி மாயம்

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது.... தாய் வெளியிட்ட தகவல்

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி வருகிறேன் என கூறி 250 ரூபாய் பணத்தையும் ஆயிஷா பெற்றுக் கொண்டார்.

அருகிலுள்ள கடைக்கு சென்று வருமாறு கூறினேன். அங்கு 3 முறை சென்று வந்தார். எனினும் அங்கு கோழி இறைச்சி இல்லாமையினால் சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதற்கு முன்னரும் அந்தக் கடைக்கு தனியாக சென்று வருவார். மிகவும் தைரியமானவர். கடைக்கு சென்றவர் காலை 11 மணி வரை வீட்டுக்கு வராமையினால் குடும்பத்தினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினேன். இது தொடர்பில் கணவருக்கும் கூறினேன். அவருமே தேடி பார்த்தார் கண்டுபிடிக்கவில்லை.

தைரியமான ஆயிஷாவுக்கு நடந்த கொடுமை

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது.... தாய் வெளியிட்ட தகவல்

ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தேடிய பின்னர் பொலிஸாரிடம் கூறினோம். அதன் பின்னர் மேற்கொண்ட தேடலின் போது மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த மகள் மூன்றாவது பிள்ளை. அவர் தனது கடைசி சகோதரி மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார். அடுத்த வருடம் மகள் 6ஆம் வகுப்பிற்கு செல்வதற்காக புத்தகங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார். அவரே அனைத்தையும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். இனி அவர் ஒரு போதும் மீண்டும் வர மாட்டார்  என தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகளின் மரணத்திற்கு தனது போதை பொருள் பழக்கமே காரணமாகிவிட்டதென சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

போதையால் பறிபோன சிறுமியின் உயிர்

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது.... தாய் வெளியிட்ட தகவல்

எனது மகளை நான் உரிய முறையில் பார்த்துக் கொள்ளாமையினாலேயே எனது மகளை இழந்து விட்டேன். போதை பொருளுக்கு அடிமையாகி விட்டேன். அதுவே இந்த நிலைமைக்கு காரணமாகிவிட்டது.

இனி இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதும் போதை பொருள் இல்லாமல் போய்விட வேண்டும். அது அனைத்தையும் அழித்துவிட்டது. எனது மகளுக்கு நடந்தது இனி வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது என தந்தை அக்ரம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  பெற்றோரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அப்பாவி சிறுமியின் உயிர் பறிபோயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட வரி

 உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி(வட் வரி)  அதிகரிக்கப்பட்டுள்ளது.

12% ஆக வரி  அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பிரதமர் அலுவலகத்தின் செய்தி 

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட வரி

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

READ MORE | comments

காவல்துறைக்கு கிடைத்த அவசர அழைப்பு - தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு

 


தந்தை, மகள் சடலங்களாக மீட்பு

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறைக்கு கிடைத்த அவசர அழைப்பு - தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு

களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல்

குறித்த வீட்டில் தந்தையும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் சடலமாக கிடந்ததாகவும், மகள் அறையில் தரையில் சடலமாக கிடப்பதாகவும் காவல்துறை அவசர பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறைக்கு கிடைத்த அவசர அழைப்பு - தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

READ MORE | comments

விமலின் மனைவிக்கு பிணை

 


போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

READ MORE | comments

மீண்டும் இரவு நேர மின்வெட்டு!

 


முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், இரவு நேர மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.


பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு மற்றும் மாலை 06 மணிக்குப் பின்னர் இரவு 01 மணித்தியால மின்வெட்டுடன் 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாக்கிகள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான மின்வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
READ MORE | comments

சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

Monday, May 30, 2022

 


பண்டாரகம - அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்.

ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் தந்தையும் ஐஸ் போதைப்பொருள் பாவைனயாளர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

சிறுமியை தேடிய சந்தேகநபர்

சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

9 வயதான சிறுமி ஆயிஷா கோழி இறைச்சி வாங்குவதற்கு கடைக்கு சென்று திரும்பாத நிலையிலும் அங்கு கோழிக்கறி சமைக்கப்பட்டிருந்ததாகவும், காலையில் காணாமல்போன பிள்ளை தொடர்பில் பிற்பகல் 2 மணியின் பின்னரே முறைப்பாடு செய்ய செய்யப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  




குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான நபர் திருமணமானவர் என்பதுடன் அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்டுலுகம சிறுமி படுகொலை - சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர் 

வாக்குமூலம்

சிறுமியை கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில்,

சிறுமியை தூக்கிச் சென்ற சந்தேகநபர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக அதை தவிர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சம்பவம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக சிறுமியை கொலை செய்ய தூண்டியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எப்படியிருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்கமைய சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

பரீட்சைக்குத் தோற்றிய மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மேற்பார்வையாளர் கைது !

 


நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அநுராதபுர மாவட்டத்திலுள்ள பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர் ஒருவரே, பரீட்சார்த்தியை மண்டபத்துக்கு வைத்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்ததை ஆசிரியையிடம் கூறியுள்ளார். பின்னர் தனது பெற்றோருடன், கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸூக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
READ MORE | comments

படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

 


மூன்றாம் இணைப்பு 

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.

இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு


பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை

சிறுமியின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சிறுமியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.

இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   

முதலாம் இணைப்பு 

நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர் ஒருவர் தொடர்பில்  காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி காணாமல் போனதையடுத்து அந்த பிரதேசம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​28 வயதுடைய அந்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

காவல்துறையினரின் சந்தேகம்

சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், இன்று (30) நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக  காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயிஷாவை பார்த்த மற்றுமொரு சிறுமி

படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

"தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன்" என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

காவல்துறையினரின் நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட காவல்துறை குழுவொன்று அட்டுலுகமவுக்குச் சென்று குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பண்டாரகம காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் இந்த குற்றத்தின் மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொணர முடிந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற

READ MORE | comments

ஆயிஷா படுகொலை விவகாரம் - சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்

 பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது

ஆயிஷா படுகொலை விவகாரம் - சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்

கீரை தோட்டத்தை அண்டிய காணியில் சதுப்பு நிலம் ஒன்றிலேயே, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதென காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் பிரேதப் பரிசோதனை நேற்று பாணந்துரை வைத்தியசாலையில் நடைபெற்றது. இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து காவல்துறையினர் கொண்ட குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குற்ற புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை

ஆயிஷா படுகொலை விவகாரம் - சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்

அதற்கமைய, அப்பகுதியில் சிசிடிவி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கபல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவரையும் மற்றுமொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காணாமல் போனதன் பின்னணி

ஆயிஷா படுகொலை விவகாரம் - சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்

பண்டாரகம, அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

சிறுமியின் சடலம் மறுநாள் பிற்பகல் வீட்டிற்கு சற்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன


READ MORE | comments

கொழும்பு பேருந்து நிலையத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி - ஒருவர் பலத்த காயம்


 புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்- ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் தயா கமகே

 


பாறுக் ஷிஹான்




மக்கள் வங்கியில் இருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்தெரிவித்துள்ள குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில்  அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மாலை  நடாத்திய விசேட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

மக்கள் வங்கியில் இருந்து நான்   அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த  வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி  குற்றம் சாட்டியிருந்தார். அவர் இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன்  பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன் இன்று கூட எனது தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கொரோனா காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆடைதொழிற்சாலைகள் இயங்கின.இங்கு தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் எனது நிறுவனத்தில் அதிகமாக வேலை செய்கின்றனர்.சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பது போல்  ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து நான்  கடன் பெற்றதில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.எனவே தற்போதைய பிரதமர்  ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் நான் எடுத்ததாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிய அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.


நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். ஆனால் இவ்வாறான  கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என்மீது பொய் குற்றச்சாட்டு   சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார். பிரதமர்  ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.அதற்காக என்னை இவ்வாறு அவர் கூற முடியாதல்லவா.இதற்காக உரிய நடவடிக்கை அவருக்கு எதிராக எடுக்கப்படும் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

அதற்காக என்னை திருடர் என தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
READ MORE | comments

கொழும்பில் தீவிரமடைந்த போராட்டக் களம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்

Sunday, May 29, 2022

 


புதிய இணைப்பு

கொழும்பு - யோர்க் வீதியில் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தற்புாது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கு சற்று முன்னர் தீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  


முதலாம் இணைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள்  முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி தீவிரமடைந்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.   

அத்துடன்,  கொழும்பு காலி முகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 50 நாட்களையும் தாண்டி நடத்தப்பட்டு வருகின்றது. 

தீவிரமடைந்த போராட்டம்


இவ்வாறான நிலையில் இன்றும் அரசாங்கத்திற்கு  எதிராக மருத்துவ மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து களத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நீர்த்தாரகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

READ MORE | comments

வீடுடைத்த குற்றச்சாட்டில் பெண் கைது !

 


நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐ போன் ஒன்றும் ஐ பாட் ஒன்றும் 6 கிராம் எடையுடைய தோடுகளும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன..
READ MORE | comments

செப்டெம்பருக்குப் பின்னர் அரிசி தட்டுப்பாடு !!

 


பெரும்போகத்துக்கான விவசாய நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் செப்டெம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென பேராசிரியர் அருண குமார எச்சரித்துள்ளார்.


நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம் வரையிலேயே போதுமானதாக இருக்கும். எனவே பெரும்போக விவசாய நடவடிக்கைகள் வெற்றியளித்தால் செப்டெம்பருக்குப் பின்னர் தேவையான அரிசி கையிருப்பில் இருக்கும். எனினும் அது தோல்வியடைந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நாட்டில் உள்ள டொலர் தட்டுப்பாடுப் பிரச்சினைகளால் அரிசிக்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
READ MORE | comments

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகர்..!! நீதிமன்று கொடுத்த உத்தரவு


 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோவில் பூசகர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதியில், வசிக்கும் சிறுமியின் தந்தை 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோவில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர்.

கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோவில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகர்..!! நீதிமன்று கொடுத்த உத்தரவு

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில், தந்தையார் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக வழக்கமாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் இருந்த சிறுமியின் நிலைமையை பயன்படுத்தி, காதல் வலையில் வீழ்த்தி சந்தேக நபரான பூசாரி இச்செயலை புரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

READ MORE | comments

பண்டாரகம சிறுமியின் மரணம்! தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் முயற்சிகள்

 


பண்டாரகம, அட்டுலுகமையில் மரணமான சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில், சிறுமியின் உடலம்  தொடர்பில் பிரேத பாிசோதனை இன்று இடம்பெறுகிறது.

எனினும் புதிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்று பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

காணாமல் போன சிறுமி

நேற்று முன்தினம், வீட்டில் இருந்து கோழியிறைச்சி வாங்குவதற்காக வியாபாரத்தளத்துக்கு சென்ற இந்த 9 வயது சிறுமி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.

பண்டாரகம சிறுமியின் மரணம்! தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் முயற்சிகள்

இதனையடுத்து நேற்று மாலை அவரது உடலம் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.

விசாரணை 

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனையக உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

READ MORE | comments

மக்களுக்கு அடுத்த இடி - பாரியளவில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

 


குறைந்த வருமானம் பெறுபவர்கள், குறைந்த மின் பாவனையாளர்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளை தவிர்த்து மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தொழிற்சாலைகளில் மூன்று முதல் நான்கு மடங்கு மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கு அடுத்த இடி - பாரியளவில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

தற்போது ஒரு யூனிட் மின்சாரம் உருவாக்க ரூ.47.18 செலவாகும், ஆனால் அனைத்து துறைகளிலும் குறைந்த விலையே வசூலிக்கப்படுகிறது என்றார்.

இலங்கை மின்சார சபை மாதாந்தம் 750 பில்லியன் ரூபாவை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு செலவிடுகின்ற போதிலும், அது வருடாந்தம் 250 பில்லியன் ரூபாவையே மின்சாரக் கட்டணமாகப் பெறுவதாக அவர் கூறினார்.

 சூரிய ஒளி மின் உற்பத்தி

மக்களுக்கு அடுத்த இடி - பாரியளவில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

மின்கட்டணம் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்றும், அதை மாதாந்திர அடிப்படையில் செலுத்தும் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடன் திட்டம் மற்றும் சீன கடன் திட்டம் மூலம் சோலார் பனல்களை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்!

Saturday, May 28, 2022

 


இலங்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம்  அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு அவை கையளிக்கப்பட்டன. கடந்த தவணையின் போது சஹ்ரானின் மனைவி சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கப்படும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழி பெயர்ப்பு அவசியம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மொழியின் முக்கியத்துவம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்!

இதற்கமைய குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய பிரதிவாதியான சஹ்ரானின் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்!

அதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் யூலை மாதம் 21 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

READ MORE | comments

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

 


பாறுக் ஷிஹான்)

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட  மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது

கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான   நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு   சென்று மின்மானியை  பரீட்சித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற  9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன்  அங்கு சிறுவனுடன்   பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு  அங்கிருந்து தப்பி  சென்றுவிட்டார்.

இவ்வாறு குறித்த மின்வாசிப்பாளர் சென்ற பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம்  குறிப்பிட்டுள்ளார்.இதனால்  குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து   மறுநாளான   வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம்  பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள  தனது வீட்டின்  அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து  மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.

பின்னர் உயிரிழந்தவர்   உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால்  மூச்சு திணறி  இறப்பு சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன்  இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில்  பெரியநீலாவணை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

READ MORE | comments

அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்! இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு அந்நாட்டில் வாழ அனுமதி

Friday, May 27, 2022





தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் முன்பு வாழ்ந்த பிலோலா (Biloela) பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.


இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் அகதி குடும்பம் பிலோலா பகுதிக்கு திரும்ப வேண்டும் பிலோலா பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்! இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு அந்நாட்டில் வாழ அனுமதி

பிரியா - நடேசலிங்கம் குடும்பத்தின் பின்னணி

கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்! இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு அந்நாட்டில் வாழ அனுமதி

பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசாங்கம். கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த குடும்பம் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், கடந்தாண்டு முதல் பெர்த் நகரில் சமூகத் தடுப்பில் இக்குடும்பம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவர்கள் பிலோலா பகுதிக்கு திரும்ப அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.


READ MORE | comments

அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம்!

 


அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது.


அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திய ‘சப்ளையர் கடன் வசதியை’ பயன்படுத்துவதை நிறுத்துமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு மாற்றாக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ரணிலுக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்! சிறிலங்காவின் அடுத்த அரச தலைவராக உருவெடுக்கும் சாத்தியம்

 


வஜிர அபேவர்தனவின் ஆருடம்

ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவெடுப்பார் என்று நான் அன்று கூறினேன்.

இன்று ரணில் பிரதமராகிவிட்டார். நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆருடம் வெளியிட்டுள்ளார்.

காலியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் வஜிர அபேவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என்று நான் முன்னர் கூறினேன். அது இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ரணிலுக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்! சிறிலங்காவின் அடுத்த அரச தலைவராக உருவெடுக்கும் சாத்தியம்

ரணிலின் சாமர்த்தியம்

அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்தே நான் ரணில் நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது, இந்த விடயத்தைக் குறிப்பிட்டேன்.

அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபா இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அதுவும் மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது. அப்படி வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்.

ரணிலுக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்! சிறிலங்காவின் அடுத்த அரச தலைவராக உருவெடுக்கும் சாத்தியம்

பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைப்பார்” என்றார்

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |