Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

 


பண்டாரகம - அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்.

ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் தந்தையும் ஐஸ் போதைப்பொருள் பாவைனயாளர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

சிறுமியை தேடிய சந்தேகநபர்

சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

9 வயதான சிறுமி ஆயிஷா கோழி இறைச்சி வாங்குவதற்கு கடைக்கு சென்று திரும்பாத நிலையிலும் அங்கு கோழிக்கறி சமைக்கப்பட்டிருந்ததாகவும், காலையில் காணாமல்போன பிள்ளை தொடர்பில் பிற்பகல் 2 மணியின் பின்னரே முறைப்பாடு செய்ய செய்யப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  




குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான நபர் திருமணமானவர் என்பதுடன் அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்டுலுகம சிறுமி படுகொலை - சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர் 

வாக்குமூலம்

சிறுமியை கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில்,

சிறுமியை தூக்கிச் சென்ற சந்தேகநபர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக அதை தவிர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சம்பவம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக சிறுமியை கொலை செய்ய தூண்டியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எப்படியிருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்கமைய சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments