குறைந்த வருமானம் பெறுபவர்கள், குறைந்த மின் பாவனையாளர்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளை தவிர்த்து மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொழிற்சாலைகளில் மூன்று முதல் நான்கு மடங்கு மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது ஒரு யூனிட் மின்சாரம் உருவாக்க ரூ.47.18 செலவாகும், ஆனால் அனைத்து துறைகளிலும் குறைந்த விலையே வசூலிக்கப்படுகிறது என்றார்.
இலங்கை மின்சார சபை மாதாந்தம் 750 பில்லியன் ரூபாவை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு செலவிடுகின்ற போதிலும், அது வருடாந்தம் 250 பில்லியன் ரூபாவையே மின்சாரக் கட்டணமாகப் பெறுவதாக அவர் கூறினார்.
சூரிய ஒளி மின் உற்பத்தி
மின்கட்டணம் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்றும், அதை மாதாந்திர அடிப்படையில் செலுத்தும் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடன் திட்டம் மற்றும் சீன கடன் திட்டம் மூலம் சோலார் பனல்களை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments