மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு!

Monday, May 31, 2021


 (செங்கலடி நிருபர் சுபா)

கொரோனா தொற்று தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்மை அர்ப்பணித்து சேவை புரியும் பொதுச்சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்திய செயற்பாட்டிற்கு எதிப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பு நாளை முதல் இடம்பெறவுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையின் கொரோனா தொற்று தொடர்பில் தொலைபேசி உரையாடல் மூலம் தமது பணிக்கு இடையூறு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெறவுள்ளது.

ஏனைய தமது சேவைகளில் ஈடுபடவுள்ள பொதுச்சுகாதார பிரிசோதகர்கள் கொரோனா தொற்று நடவடிக்கையில் இருந்து மாத்திரம் தமது பணியை பகிஸ்கரிப்பு செய்யவுள்ளனர்.

அச்சுறுத்திய குறித்த நபரை கைது செய்யும் வரை இந்த நடவடிக்கை தொடரப்படவுள்ளது
READ MORE | comments

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 145 பேருக்கு கொரோனா !

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  திங்கட்கிழமை 145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.


இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக

மட்டக்களப்பு - 23
ஆரையம்பதி - 10 
வெல்லாவெளி -17
காத்தான்குடி -02
களுவாஞ்சிகுடி -19
வாழைச்சேனை - 08
கோறளைப்பற்று மத்தி - 08
ஓட்டமாவடி -08
செங்கலடி - 14
ஏறாவூர் -25
கிரான் -10
முப்படையினர் -01
READ MORE | comments

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்! துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்ற உத்தரவு

 


பொலிஸ் நிலையத்திற்குள் குருணாகல் மேயரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு அனுமதித்த துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நகரின் மேயருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் துணை பொலிஸ் அத்தியட்சகரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விசமர்சனங்களைத் தொடர்ந்து துணை பொலிஸ் அத்தியட்சகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இலங்கையின் இன்றைய கொவிட் நிலவரம் வெளியானது


இலங்கையில் இன்று இதுவரையில் 2,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இன்று மாலை வெளியான கொவிட் அறிக்கையின்படி 1,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் மேலும் 1,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 185,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 1,441 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

காற்றில் பரவும் கொரோனா – வியட்நாம் சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு!

 


வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் எவருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படமாட்டாது என அந்த மேலும் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர்.

குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின் கலவை என்றும் அது காற்றில் வேகமாகப் பரவும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

வாழைச்சேனையில் 9240 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது ! பாரவூர்தி பறிமுதல் ! மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா


வாழைச் சேனையில் சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்களை பாரவூர்தியொன்றில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரம் - முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு!


 எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி மட்டக்களப்பு நகர் பகுதிக்குள் அநாவசியமாக பயணிப்போரை சோதனையிடும் பணிகளை இன்று 31.05.2021 ஆந் திகதி திங்கட்கிழமை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

கல்லடிப் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், வீதிகளில் பயண அனுமதிப்பத்திரம் இன்றி அநாவசியமாக பயணிப்போர் இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறாக அரசினால் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பார்களேயாயின் மிக விரைவில் மாவட்டத்தையும் நாட்டையும் விட்டு கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதே சுகாதாரத்துறையினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.




READ MORE | comments

மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச சேவை!

 


கொவிட்-19 தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக - தற்போது பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட்டிருப்பதுடன், நாடளாவிய நடமாடக் கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இத்தகைய சூழலில் - இணைய வழி மூலமாகவே மாணவர்கள் தமது பாடசாலை கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

அதேவேளையில் இணைய வழியில்‌ பாடசாலைக் கல்வியைக் கற்பதற்‌கான தகவல்‌ தொடர்பு மற்றும் சாதன வசதிகள் குறைவான மாணவர்கள்‌ - சாதாரண தொலைபேசி அழைப்பினை கட்டணமின்றி மேற்கொள்வதன் மூலம் பாடசாலைக் கல்வியைக் கற்பதற்கான ஒழுங்குகளைக் கல்வி அமைச்சு செய்துள்ளது.

அதன்படி கைத்தொலைபேசி அல்லது நிலையான இணைப்பு தொலைபேசி ஒன்றிலிருந்து‌ 1377 என்ற இலக்கத்தை அழைத்து மாணவர்களுக்கான தொடர்பு மொழியைத் தெரிவு செய்வதன் ஊடாக இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

திங்கள்‌ தொடக்கம்‌ வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல்‌ பிற்பகல் 12.00 மணிவரை மாணவர்‌கள்‌ தமக்குத்‌ தேவையான பாடங்களின் விளக்கங்களையும்‌ ஐயங்களையும்‌ இந்த சேவை ஊடாகக் கேட்டறிய முடியும்‌.

இந்தச் சேவைக்காகத் தொலைபேசிக்‌ கட்டணம்‌ எதுவும்‌ அறவிடப்படமாட்டாது.

தற்போதைய இணைய வழி கற்றல்‌ நடவடிக்கைகள்‌ 50 வீதமான மாணவர்களைச்‌ சென்றடையவில்லை என்ற தகவல்கள் அரசாங்கத்தால்‌ கண்டறியப்பட்டதன் அடிப்படையிலேயே சாதாரண தொலைபேசி ஊடாகக்‌ கற்‌கின்ற இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக இந்த சேவை மூலமாக பிரத்தியேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் தமக்கு எழுகின்ற ஐயங்கள இந்த சேவை ஊடக மாணவர்கள் தீர்த்துக்கொள்ள முடியும்.

தற்போதைய காலத்தின் தேவையை கருத்தில் எடுத்து, எமது அரசாங்கத்தினால், குறிப்பாக கல்வி அமைச்சினால் செய்யப்பட்ட பரிந்துரைக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கும் அமைய டயலொக் அக்‌ஷியாடா நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஶ்ரீ லங்கா ரெலிகொம், லங்கா பெல் ஆகிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள், மேற்படி எந்தவொரு தொலைபேசி சேவை வழங்குனரின் வலையமைப்பின் ஊடாகவும் 1377 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு இந்த கற்றல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த சேவையை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு பாடம் தொடர்பிலும், அனுபவம் வாய்ந்த, நிபுனத்துவம் மிக்க ஆசிரியர்கள் இதற்காக மாணவர்களுடன் தொடர்புபடுத்தப்படுவார்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் - கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழிகளான தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள் தொடர்பான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இந்த சேவை மூலமாக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
READ MORE | comments

பயணத் தடை தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்தி...!!

 


நாடு பூராகவும் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


இன்று (திங்கட்கிழமை) இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைக் குறைக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் வார இறுதியில் இந்த முறை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அதன்படி பயணக் கட்டுப்பாடு இதுவரை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மக்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பயணத் தடையின் போது அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டிருந்தமை காரணமாக இது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது!!

 


நாடுபூராகவும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தானது பொலிஸாரால் மறுக்கப்பட்டு சாரதி மற்றும் பயணம் செய்த 48 பேர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த பேருந்தானது அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையிலேயே குறித்த தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த பேருந்து, இங்கினியாகலா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் நேற்று 93 கொரோனா நோயாளர்கள் அடையாளம்- களுவாஞ்சிக்குடியில் மாத்திரம் 25பேர் அடையாளம்...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 93பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.


சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில்,
மட்டக்களப்பு பிரதேசம்:- 06பேர்
களுவாஞ்சிக்குடி பிரதேசம்:- 25பேர்
வாழைச்சேனை பிரதேசம்:- 03பேர்
காத்தான்குடி பிரதேசம்:- 08பேர்
கோறளைப்பற்று மத்தி:- 04பேர்
செங்கலடி பிரதேசம்:- 08பேர்
ஏறாவூர் பிரதேசம்:- 02பேர்
பட்டிப்பளை பிரதேசம்:- 08பேர்
கிரான் பிரதேசம்:- 17பேர்
ஓட்டமாவடி பிரதேசம்:- 10பேர்
ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 60 பேரும் பெண்கள் 33பேரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
READ MORE | comments

விமான நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

 


இலங்கை விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்படுமா? அல்லத இன்று திறக்கப்பட உள்ளதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் தேசிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தொடர்வது மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் மே 21 நள்ளிரவு முதல் 14 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்திருந்து.

இருப்பினும், நாட்டிலிருந்து புறப்படும் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

உலகிலேயே மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் புதிதாக வியட்னாமில் தோன்றியுள்ளது!

 


வியட்நாமில் புதிய அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவக்கூடியதாக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ல் சீனாவில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.

அதன்பின், அவ்வைரஸ் உருமாற்றம் அடைந்து பல நாடுகளுக்கும் பரவியது. அவை, இந்தியா, பிரேசில் வைரஸ், பிரிட்டன் வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என வகைப்படுத்தி கூறப்பட்டன.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டில் புதிய வகை அதிக வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாம் அமைச்சர் நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ், இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்ததாகவும், அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வியட்நாம் அரசு, உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அனுப்பியுள்ளது.

அது புதிய வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடும்.

READ MORE | comments

மிகப்பெரிய திருட்டு கும்பல் பிடிபட்டது- 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீட்பு...!!

Sunday, May 30, 2021

 




இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் 12 முச்சக்கரவண்டிகளும் 5 மோட்டார் சைக்கிள்களும் மேலும் சில வாகனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இவை கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் என்று தெரியவந்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் 25 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே யாருடையதேனும் முச்சக்கரவண்டிகள் கொள்ளையிடப்பட்டிருந்தால் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
READ MORE | comments

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்!

 


கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.


பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.

இவர்களின் மனநிலையினை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பயணத்தடை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகிறது.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதனையும் முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீதியில் கடமையில் ஈடுப்படும் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஒரு சில பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன. பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கடமையில் ஈடுபட வேண்டாம் எனவும் கடினமான முறையில் செயற்பட வேண்டாம் எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதியில் கடமையில் ஈடுப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உணவு உண்ணவும், இயற்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் கூட நேரம் கிடைக்காத அளவிற்கு அவர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள். ஆகவே பொது மக்களும் அவர்களின் மனநிலையினை புரிந்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும். ஆகவே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இரு தரப்பினரும் அனுசரித்து செயற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. பொது மக்களை காட்டிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்.
READ MORE | comments

கிரான்குளத்தில் 1271 மதுபான போத்தல் மீட்பு ! மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

 


மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மதுபானசாலை ஒன்றில் பின்பகுதியை திறந்து மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் 4 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 1,271 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று காலையில் குறித்த மதுபானசாலையை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது மதுபானசாலையின் பின்பகுதி வாசல் பகுதியால் ஒருவர் மதுபானங்களை வியாபாரத்துக்காக வெளியில் எடுத்துக் கொண்டுவந்த நிலையில் பொலிசார் அவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து குறித்த மதுபானசாலை பின்பகுதி வாசல் பகுதியால் பொலிசார் முற்றுகையிட்டனர் இதன்போது மதுபானசாலை வெளிப்பகுதியில் மதுபானங்களை வைத்துகொண்டிருந்து மதுபானசாலையில் கடமையாற்றும் ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து 1271 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட மதுபானங்களை மதுவரிதிணைக்களத்திடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
READ MORE | comments

இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு புதிதாக தொற்று

 


இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 182,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 1,405 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

தடுப்பூசி வழங்கப்படும் திட்டத்தை நேரில் ஆய்வு செய்த மஹிந்த!


 மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் அது குறித்து கண்காணிப்பு விஜயம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் மேற்கொண்டிருந்தார்.

மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்த பிரதமர் தடுப்பூசி வழங்கும் செயன்முறை குறித்து பார்வையிட்டார்.

மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அரச அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதார சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக, கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

 


பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் நிலவும் கோவிட் நிலமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சீரற்ற காலநிலை காரணமாகவும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை கருத்திற் கொள்ளாது ஜுன் 11 க்கு முன்னர் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விண்ணப்பத்தை தற்காலிகமாக நிலமை சீரடையும் வரை நிறுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை முன்வைத்து கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

அத்தோடு, ஜுன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு்ளளதாகவும், மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றார் குறிப்பிட்டளவிலானோர் சிகிச்சை நிலையங்களில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாகவும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

அத்தோடு, ஒன்லைனில் விண்ணப்பத்தை நிரப்ப பல கிராமப்புறப் பிரதேசங்களில் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லை என்பதோடு இணைய வசதிகளையும் பெற்றுக் காெள்ள முடியாதுள்ளனர். எனவே இவற்றின் காரணமாக பல மாணவர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

மாணவர்களும் பெற்றார்களும் இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு்ளள இந்நேரத்தில் மிக அவசரமாக விண்ணப்பம் கோரி, மிக அவசரமாக விண்ணப்ப முடிவுத் திகதியை அறிவிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு என்ன தேவை உள்ளது என்பதை தாம் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அத்தியாவசியப் பொருட்களை இடையூறின்றி விநியோகிக்க நடவடிக்கை!

 


பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை இடையூறு இன்றி விநியோகிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இது சம்பந்தமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். நாடு தழுவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான சேவையினை முன்னெடுப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

சதோச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.

இதேவேளை அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை நாளை 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி அதாவது ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4.00 மணி வரையில் தற்போதைய பயணக்கட்டுபாடு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகிறது. மருந்தகங்களை மாத்திரம் இக்காலப்பகுதியல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார மத்திய நிலையங்கள் 31 ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மனைவி மீது கணவன் வாள்வெட்டு!

 


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் வாள்வெட்டு மேற்கொண்டதில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், வாள்வெட்டைத் தடுக்கச் சென்ற 24 வயதுடைய உறவினர் இளைஞன் ஒருவருமே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதன் விளைவாகவே, இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து, சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் நேற்று 21ஜனாஸாக்கள் நல்லடக்கம்- ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்!!

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று(29) சனிக்கிழமை இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கொரோனாவினால் மரணமடையும் சடலங்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 298, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியினை பயன்படுத்தி கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை காட்டி சிலர் பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறிவிடப்படவில்லை. அவ்வாறு யாருக்கும் பணம் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை பிரதேச சபைக்கு தெரியப்படுத்துமாறும்; வேண்டுகின்றேன்.

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஆகியன பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் கொரோனாவில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டின் கொரோனா மரணம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் வேறு பாகங்களிலும் அடக்கம் செய்வதற்கு உரிய இடங்களை அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
READ MORE | comments

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் வெளியாகியது...!!


 2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன வெளியிடப்பட்டுள்ளன.


மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு- பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு...!!

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று (29) மாலை மட்டி எடுப்பதற்காக சென்ற வேளையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியை அண்மித்த ஆற்றிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போயிருந்த இளைஞர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றங்கள் வரலாம்! இராணுவ தளபதி தகவல்

 


தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான தீர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது,

தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கமைய ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்திற் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

எனினும் கடந்த 25ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எமது மக்கள் மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எனினும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டின் நிலைமைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளையும் கண்காணிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறும் காரணங்களை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றால் போல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். அவ்வப்போது தளர்வுகளை ஏற்படுத்தாது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நாட்டினை முடக்க வேண்டும் என இறுதியாக கூடிய செயலணிக் கூட்டத்திலும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர்.

எனவே அவர்களின் ஆய்வுகள் தரவுகள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேர்ந்தது. அதற்கமைய 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானங்களை எடுக்கையில் நாம் மக்களை கருத்திற் கொண்டுள்ளோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சகலருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வர்த்தக செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

READ MORE | comments

ஜுன் 7 இற்குப் பின்னரும் பயணத்தடை நீடிப்பா? வெளிவந்த அறிவிப்பு

Saturday, May 29, 2021

 


ஜுன் 7ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடருமான என்பது குறித்து இன்னும் எவுதும் அறிவிக்கப்படவில்லை. 

READ MORE | comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை விடுத்து பிசிஆர் உபகரணங்கள் கொள்வனவு செய்யுங்கள்- பா.உறுப்பினர் கோ.கருணாகரம்!!

 


தற்போயை நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கொவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவு சம்மந்தமாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் கவலைக்கிடமானதும், துரதிஸ்டவசமானதுமான நிலையில் இலங்கை மாறிக் கொண்டு வருகின்றது. கொரோணாவின் வேகம் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்கள் வரை இன்று பரவியிருக்கின்றது. இந்த நிலையில் கொரோணாவைத் தடுப்பதற்காகவும், நிறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ விரும்பத்தக்கதோ அல்லது ஒரு தீர்வை கொடுக்கக் கூடியதாகவோ இல்லை என்றே கூறவேண்டும்.

ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கொரோணாவிற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பாவிக்கப்பட்டிருக்கும் போது இலங்கையில் கடந்த ஜனவரி 09ம் திகதிதான் முதலாவது தடுப்பூசியைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுகூட இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக ஆறு இலட்சம் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய கொவிட் சீல்ட் மருந்துவகைகள் பன்னிரண்டு இலட்சத்தினை வழங்கிருந்தார்கள். ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை இல்லாமல் முதலாவது தடுப்பூசியை ஒன்பது இலட்சம் பேருக்குக் கொடுத்ததன் காரணமாக இரண்டாவது தடுப்பூசி கொடுப்பதற்கு அரசாங்கம் திண்டாடியதையே பார்கக்கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து திண்டாட்டத்தினைச் சமாளிப்பதற்காக தடுப்பூசி பாவிக்கப்படாத நாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக உரிய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றார்கள். அதற்கும் அப்பால் வேறு வகை தடுப்பூசிகளை வழங்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் சில மருத்துவ அதிகாரிகள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை இல்லாத தான்தோன்றித்தனமான நடவடிக்கையாகவே இருக்கின்றது.

அதற்கு மேலாக தற்போது நாட்டில் பல மாவட்டங்களைப் பொருத்த மட்டில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொருத்தமட்டில் கொரோணாத் தொற்று என்பது கிராமங்கள் வரை சென்றிருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொற்ற இனங்காணப்பட்டால் அந்தப் பிரதேசத்தின் அனைத்து மக்களையும் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கு குறைவாக இருக்கின்றது. பிசிஆர் இயந்திரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இருக்கின்றது. அதுவும் போதாமல் இருக்கி;றது. ஆனாலும் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களும், வர்த்தகர்களும் முன்வந்து இதற்கான உதவிகளைச் செய்து வருவதற்கு மிகவும் பாராட்டத்தக்க விடயம். மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எனற வகையில் நானும் மக்கள் சசார்பபில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் அரசும் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

ஆனால் அரசாங்கமானது தற்போயை சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது சம்மந்தமாகவும் மேலும் பல வாகனங்களை வேறு தேவைகளுக்காக இறக்குமதி செய்வது தொடர்பிலும் அமைச்சரவையூடாக முடிவெடுத்திருப்பதாகவும், அதன் பின் முடிவு வாபஸ் பெற்றிருப்பதாகவம் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போயை நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையானது அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கொவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகித்து அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பொலிசாhர் மற்றும் பொதுமக்கள் என ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றார்ககள்.

அதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஆடைத்தொழிற்சாலை என்பது எமது பிரதேசங்களுக்கு மிகத் தேவையானவை. அந்த அந்த மாவட்டங்களிலே வாழும் பல ஏழைக் குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிசாலைகளை நம்பித்தான் வாழுகின்றார்கள். இருப்பினும் தொற்றாளர்கள் அதனூடாக வரும் போது மேலும் பல கிராமங்கள் தொற்றுள்ள கிராமங்களாக மாறக் கூடிய சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் ஆடைத்தொழிற்சாலை நிருவாகமும், அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
READ MORE | comments

திருகோணமலையில் இன்று 5 கொரோனா மரணங்கள் ! 73 பேருக்கு கொரோனா

 


கதிரவன்)

திருகோணமலையில் இன்று 35 ஆண்கள்,  38 பெண்கள் அடங்கலாக 73 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் . 
கந்தளாய் 17,
மூதூர் 13,
குறிஞ்சாக் கேணி 2, 
கிண்ணியா 10, 
திருகோணமலை 7,
உப்பு வெளி 3,
குச்சவெளி 12, 
தம்பலகாமம் 9, 
என தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இன்று ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.  
திருகோணமலை மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது 
READ MORE | comments

மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையில் 14 நாட்களில் 157 பேருக்கு கொரோனா !


 மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இதனையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதிவரை தற்காலிகமாக மூட முடிவு எடுக்கப்பட்டதாக இன்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1197 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு- கரடியனாறு கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் திறந்து வைப்பு!!

Friday, May 28, 2021

 


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் இன்று 28.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 1000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவருமாகிய பசில் ராஜபக்ஸ அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பா.சந்திரகுமார் ஆகியோரின் முன்மொழிவுக்கு அமைய ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வைத்தியசாலையே இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட குறித்து தற்காலிக வைத்தியசாலையானது நோயாளர்களுக்கான மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள் உட்பட ஏனைய
சகல வசதிகளையும் கொண்ட தற்காலிக விடுதியாக இது அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் உள்ளிட்ட மதகுருமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், செங்கலடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா, அம்கோர் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |