எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி மட்டக்களப்பு நகர் பகுதிக்குள் அநாவசியமாக பயணிப்போரை சோதனையிடும் பணிகளை இன்று 31.05.2021 ஆந் திகதி திங்கட்கிழமை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
கல்லடிப் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், வீதிகளில் பயண அனுமதிப்பத்திரம் இன்றி அநாவசியமாக பயணிப்போர் இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறாக அரசினால் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பார்களேயாயின் மிக விரைவில் மாவட்டத்தையும் நாட்டையும் விட்டு கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதே சுகாதாரத்துறையினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
0 Comments