Advertisement

Responsive Advertisement

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்! துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்ற உத்தரவு

 


பொலிஸ் நிலையத்திற்குள் குருணாகல் மேயரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு அனுமதித்த துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நகரின் மேயருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் துணை பொலிஸ் அத்தியட்சகரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விசமர்சனங்களைத் தொடர்ந்து துணை பொலிஸ் அத்தியட்சகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments