Home » » மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் நேற்று 21ஜனாஸாக்கள் நல்லடக்கம்- ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்!!

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் நேற்று 21ஜனாஸாக்கள் நல்லடக்கம்- ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்!!

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று(29) சனிக்கிழமை இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கொரோனாவினால் மரணமடையும் சடலங்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 298, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியினை பயன்படுத்தி கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை காட்டி சிலர் பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறிவிடப்படவில்லை. அவ்வாறு யாருக்கும் பணம் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை பிரதேச சபைக்கு தெரியப்படுத்துமாறும்; வேண்டுகின்றேன்.

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஆகியன பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் கொரோனாவில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டின் கொரோனா மரணம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் வேறு பாகங்களிலும் அடக்கம் செய்வதற்கு உரிய இடங்களை அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |