மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இதனையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதிவரை தற்காலிகமாக மூட முடிவு எடுக்கப்பட்டதாக இன்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1197 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments