Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அத்தியாவசியப் பொருட்களை இடையூறின்றி விநியோகிக்க நடவடிக்கை!

 


பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை இடையூறு இன்றி விநியோகிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இது சம்பந்தமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். நாடு தழுவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான சேவையினை முன்னெடுப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

சதோச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.

இதேவேளை அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை நாளை 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி அதாவது ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4.00 மணி வரையில் தற்போதைய பயணக்கட்டுபாடு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகிறது. மருந்தகங்களை மாத்திரம் இக்காலப்பகுதியல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார மத்திய நிலையங்கள் 31 ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments