மட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு

Tuesday, June 30, 2020

மட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு இன்று 30.06.2020 நடைபெற்றது.







READ MORE | comments

மின் கட்டணம் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி on 6/30/2020 04:26:00 PM

கொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

மேலதிக வகுப்புக்களை சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும் வகையில் இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை அறிவுருத்தியது.

குறிப்பாக ஆயிரத்திற்கு கூடுதலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய மேலதிக வகுப்புக்களை 250 மாணவர்களுக்க வரையறுப்பது சிரமமாகுமென விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் மேலதிக வகுப்புகள் நடைபெறுவது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்கான கோரிக்கையும் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது.

இதேவேளை விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதை தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் முழுமையான ஆலோசனையின் பின்னர் பரீட்சை தொடர்பான திகதிகளை மறுபரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்க தோற்றகின்ற மாணவர்களுக்கு 5 மாதங்களுக்கும் கூடுதலான காலம் கல்வி கற்பதற்கு கிடைக்கவில்லை. மேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கும் இந்நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
READ MORE | comments

வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கான வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான ஆலோசனை போக்குவரத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நியமிக்கப்பட்ட குழுவினால் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனையை அமைச்சரவைக்கு முன்னைவக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரச வேலை ஆரம்பிக்கும் நேரம் 9 மணியாகவும் முடிவடையும் நேரம் 4.45 மணியாகவும் ஆலோசனை வழங்கப்ப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் துறை காலை 9.45 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.45 மணி வரை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

கருணா அம்மானிற்கு  தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னம் இலக்கம் 6 இல் போட்டியிடும் இவர்   திங்கட்கிழமை(29) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் பொதுஜன பெரமுன கட்சிக்கு  எதிராக களமிறங்கியுள்ள தொலைபேசி சின்னம் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலவரம் இருக்கின்றது. எமக்கு  சவாலாக பல முஸ்லிம் சகோதரர்கள் பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஊடாக களமிறங்கியுள்ள நிலைமை ஓரளவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு சவாலாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

அம்பாற மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வெல்வதற்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினர்கள்   தோல்வி அல்லது பாராளுமன்ற பிரதிநித்துவத்தை குறைப்பதற்கு வழி வகுப்பார்கள் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி  அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொண்ட விடயம் எல்லோருக்கும் தெரியும் அதேபோல் இம்முறையும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும். முஸ்லிம் மக்களின் உரிமை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே இருக்கின்றது. எனவே தான் அதன் ஏற்பாட்டில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியப்படும்  என்பதனை புத்திஜீவிகளும் மக்களும் விளங்கி இருக்கிறார்கள்.

இன்று பல பேர் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக   ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலான முறையில் களமிறங்கியுள்ளனர்.இந்நிலைமை   மக்களை குழப்புகின்ற நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. எவ்வாறென்றால் ஊருக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்று விட வேண்டும் என்ற கோஷத்தோடு மக்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது விகிதாசார தேர்தல் முறையில் காணப்படுவதுடன்  ஆகக்குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை பெறாத எந்த கட்சியும் பாராளுமன்ற உறுப்பினரை பெறமுடியாது. இதற்கு உதாரணம்  கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகளால் ஒரு பிரதிநிதி பெறமுடியவில்லை என்ற பாடத்தை மக்கள் விளங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம் மக்களை இவ்வாறானவர்கள்  முகஸ்துதிக்காக  சந்தித்திருக்கிறார்கள்.இதனால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மிகப் பாரதூரமான நஷ்டத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இது  ஒரு எதிர்வினை நிலைமையை தோற்றுவிக்கும். இதனால் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருக்கும்.

ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை மாற்றிக் கொண்டு  இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான சட்டதிட்டங்களை மாற்றியமைக்கக்கூடிய பெரும்பான்மை சில வேளை பொதுஜன பெரமுவிற்கு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை  வைத்து  எமக்கான எந்த ஒரு அரசியலும் அணுகுமுறையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஒரு பாரிய ஆபத்து இருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருணா அம்மான் தனித்துவமான ஒரு காட்சியிலே போட்டியிடுகின்றார் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் எதுவாயினும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலான தமிழ்மகன் ஒரு பிரதிநிதியாக இருக்கின்ற விடயத்தில் மிக கவனமாக இருப்பார்கள் என நம்புகின்றேன். கருணா அம்மான் கூட இந்த தேர்தலில் தோற்கடிக்க படுவார் அவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த சிறுபான்மை கட்சி சார்பாக களம் இறங்கியிருக்கின்ற எந்த ஒரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறாமல் தோல்வி அடைவார்கள் அந்த வகையில் அவர்களுக்கு அளிக்கும் எந்த ஒரு வாக்கும் பிரயோசனம் அற்றது என கருதி தெளிவான ஒரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டார்.
READ MORE | comments

ஆன்மீகம்கதிர்காம பாத யாத்திரைக்கான தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- “இலங்கையில் முருகப்பெருமான் குடிகொண்டு திருவருள் பாலிக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இந்து தமிழ் மக்களும், சிங்கள மக்களும், பாதயாத்திரையாக செல்வது பல்லாண்டு காலமாக நடாத்தப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் கதிர்காமத்திற்கு பாத யாத்திரையை கட்டாயம் செல்ல வேண்டும் என்று உறுதியுடன் இருக்கின்றார்கள். இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சுகாதார திணைக்களம் என்பவற்றுக்கு மகஜர் அனுப்பியுள்ளேன். கதிர்காமத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளேன்.
கதிர்காம பாதயாத்திரை தொடக்கம் முதல் கதிர்காமம் முருகன் ஆலய தரிசனம் செல்லும் வரை யாத்திரிகர்கள் சுகாதார முறையினை பேணி செல்வார்கள் என்று உறுதி வழங்கியுள்ளனர். எனவே அரசாங்கம் கொண்டுள்ள கொள்கையை மாற்றி அனுமதி வழங்குமாறு வேண்டுகின்றேன். எனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனவே கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பக்தர்கள் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெரும்பாலும் அடியார்கள் தங்களது நோக்கங்கள், துன்பங்கள், அவசியத் தேவைகளை வேண்டுதல் செய்து நேர்த்தி வைத்து அது நிறைவேறியதும் தமது பாதயாத்திரையை பக்தி பூர்வமாக மேற்கொள்கின்றனர். இவ் வடியார்களில் ஒருவராக முருகனும் செல்வார் என்பது நீண்டகால நம்பிக்கை ஆகும். பல அற்புதங்களும் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு நிகழ்ந்துள்ளது. இவ் வேளை இக்கொரோணா வைரஸ் பரவல் காரணமாக சுகாதார நிலையைப் பேணும் அவசியத்தின் நிமிர்த்தம் இம் முறை கிழக்கில் இருந்து பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உதவுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மீண்டும் அன்பாக வேண்டுகின்றேன்” என்றார்.
READ MORE | comments

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை: ஐரோப்பிய ஒன்றியம்

Monday, June 29, 2020



உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுக்கான நாடுகள் பட்டியலில் பரிசீலிக்கப்படாதபோதும் இலங்கை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தற்காலிக தடையை நீக்குவது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளன.
உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான செயல்முறை சிறப்பாக நடைபெற்று வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான இறுதி முடிவு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஷெங்கன் நாடுகளின் உரிமையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

சுகாதார நடைமுறைகளுடன் நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்ட பாடசாலைகள்!


கொரோனாத் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் கிருமிகளை நீக்கும் திட்டம், துப்பரவு செய்தல் போன்றவற்றுக்கான அட்டவணைகள் ஆயத்தம் செய்த பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி தரம் 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் உள்ளிட்ட கல்வி வலயங்களில் பாடசாலை சமூகம் சிரமதானங்களை முன்னெடுத்து தயாராகி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.




மலையகம்
மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.









யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படிமகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்ததோடு பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் பங்குபற்றுதலுடன் பாடசாலைகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.







கிண்ணியா
கிண்ணியா வலய பாடசாலைகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.







மட்டக்களப்பு
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.



பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



READ MORE | comments

கொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, மூக்கு ஒழுகுதல், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இரண்டு முதல் 14 நாட்களுக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதே முதல் அறிகுறியாக இருந்தது.

மேலும், காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவையும் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளாகக் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
READ MORE | comments

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 11ஆம் திகதி சிவன் ராத்திரி விடுமுறையும் 28ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பெரிய வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறையும் மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தின விடுமுறையும், 14ஆம் திகதி ரமழான் விடுமுறையும், 26 மற்றும் 27ஆம் திகதி வெசாக் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜுன மாதம் 24ஆம் திகதி பொசன் போயா தின விடுமுறையும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறையும் 2ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி போயா தின விடுமுறையாகும். செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும், ஒக்டோபர் 19ஆம் திகதி நபிகள் பிறந்த நாள் விடுறையும் ஒக்டோபர் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி விடுமுறை மற்றும் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் 25ஆம் நத்தார் தின விடுமுறையும் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

முகக்கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பிரவேசித்த ஆயிரத்து 200 இற்கும் அதிகமானோர்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கென முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கோட்டை, பொரள்ள, தெமட்டகொட, கடவத்தை, கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
READ MORE | comments

தோண்டத் தோண்டப் பணக்குவியல்! மிரண்டு போன பொலிஸார் - விசாரணையில் வெளியான தகவல்

பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(27) குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை இரகசியமான முறையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பணம் போதைப் பொருட்களை விற்பனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து அதிகாரிகள் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துபாயில் உள்ள பிரதான தரப்பு போதை பொருள் விற்பனையாளரான கிஹான் பொன்சேகாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 90 கிலோ கிராம் ஹேரோயினை இந்த பொலிஸார் திருடி விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த புதைக்கப்படடிருந்த பணம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற்றுநிருபம் ஒரு பார்வை.

பாடசாலையின் முதல் வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி பாடசாலைகள் மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கான வாரமாகும்.

கல்வியமைச்சின் சுற்றுநிருபமான - ED/01/12/06/05/01 இலக்க 22.06.2020 சுற்றுநிருபம் இதனை வெளிப்படுத்துகிறது.

1 பாடவேளை 1 மணிநேரமாக திட்டமிடப்படும்.

இச்சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் 10.30 மணிக்கு சென்றால் போதுமானது. அவர் காலை 7.30 மணிக்கே செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.

அத்துடன் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்பட வேண்டும். வாரத்தில் 1நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு 3.30மணிவரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு - அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.


இந்தத் திட்டமிடலுக்காகவே - முதல்வாரம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிட வேண்டும்.

பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது. இந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத் தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.
இந்த நடைமுறைகளுக்காகவே தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது.

லீவு எடுப்பதாக இருந்தால்  குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது.
 
READ MORE | comments

ஓமானில் இருந்து 228 பேர் இலங்கைக்கு!

ஓமானில் இருந்து 228 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நெருக்கடியை சந்தித்த இவர்கள் இன்று அதிகாலை சிறப்பு விமானம் மூலம் மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
READ MORE | comments

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பான விசேட அறிவிப்பு on 6/29/2020

2019ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |