கொரோனாத் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் கிருமிகளை நீக்கும் திட்டம், துப்பரவு செய்தல் போன்றவற்றுக்கான அட்டவணைகள் ஆயத்தம் செய்த பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி தரம் 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் உள்ளிட்ட கல்வி வலயங்களில் பாடசாலை சமூகம் சிரமதானங்களை முன்னெடுத்து தயாராகி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.




மலையகம்
மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.





யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படிமகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்ததோடு பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் பங்குபற்றுதலுடன் பாடசாலைகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.




கிண்ணியா
கிண்ணியா வலய பாடசாலைகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.




மட்டக்களப்பு
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




0 Comments