ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் நடிகர் சல்மான்கான் ஒரு நம்பிக்கை துரோகி – வைகோ

Tuesday, December 30, 2014

    
vaiko vs salman khanபாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கை துரோகி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் சல்மான்கான். இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என்றார் காட்டமாக. ADVERTISEMENT இலங்கையைச் சேர்ந்தவரும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்சேவுக்காக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்து அனைவரையும் அதிரவைத்துள்ளார் சல்மான் கான்.
3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்தது தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் பரவவைத்துள்ளது. இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரசாரம் செய்ததற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் வைகோ அவரை நம்பிக்கைத் துரோகி என்று கடுமையாக சாடியுள்ளார்.
READ MORE | comments

நீதியான தேர்தலை எதிர்பார்க்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர்!

இலங்கையில் அமைதியான, நீதியான தேர்தல் ஒன்று குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்சுடன் கடந்த வாரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பான் கீ மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன், சிறுபான்மையினரும் பயமின்றி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார் என்றும் சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பில் ஏமாற்றப்பட்ட பெண்கள் மோகனுக்கு எதிராக ஆர்பாட்டம்;

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காணி
பெற்று தருவதாக கூறி பல லட்சம் ருபா மோசடி செய்த செங்கலடி செல்லம் பிரிமியர் தியட்டர் உரிமையாளரும் ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளருமாகிய மோகனுக்கு எதிராக ஆர்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.

ஏழைப் பெண்களிடமும் தமிழ் மக்களிடமும் தளவாய் சவுக்கடி பிரதேசங்களில் காணி பெற்றுத்தருவதாக கூறி கடந்த 1 வருடமாக 300 க்கு மேற்பட்டோரிடம் 1 ஏக்கர் காணி எழுத்துக்கூலிக்காக 10000 -20000 வரை காசு பெற்று அரச காணிகளையும் உரிமை கோரப்படாத மக்களின் காணிகளையும் தருவதாக கூறி பல லட்சம் ருபா பணத்தினை பெற்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வந்த வேளை குறித்த காணிகளை வேறு சில இஸ்லாமிய சகோதரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து தான் தப்பித்துக் கொள்வதற்காக ஜக்கியதேசிய கட்சியில் இணைந்து கொண்டதாகவும் ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்ட மக்கள் கூறினர்.


குறித்த மோசடியினை மேற் கொண்ட மோகனுக்கு நீதியான விசாரiகைளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அவலப் பெண்களுக்கு நீதியை பெற்றுத்தருமாரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்READ MORE | comments

நேற்று இரவு வெளியாகிய Mahinda Raja Paksha தினத்தந்தி பேட்டி (வீடியோ இணைப்பு)

READ MORE | comments

மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தெர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு,
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும் ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:
1. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார். அத்தோடு தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.
2. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன.
த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 18வது சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததையிட்டு பெருமைகொள்கின்றது. அன்று 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துத் தவறு செய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.
3. ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைபொம்மையாக மாறிக்கிடக்கின்றது.
4. அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையம், அரசசேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார். இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது சுதந்தர ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே த.தே.கூ. வின் துல்லியமான கருத்தாகும்.
ராஜபக்ஷ அரசு எப்பொழுதும் தமிழ்பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்கு பிளவுபடாத இலங்கைக்குள் நேர்மையானதும், நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வினைக் காண த.தே.கூ. அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.
அத்தீர்வு பற்றிய எமது நிலைப்பாட்டை எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் நாம் பகிரங்கமாக நாட்டுக்குத் தெரியப்படுத்திவந்துள்ளோம். யுத்தத்திற்குப் பின்னர் ராஜபக்ஷ அரசானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர முயலாது காலத்தை வீணடிக்கும் கபடத்தனமான செயல்களையே செய்துவந்துள்ளது.
யுத்தம் காரணமாக வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. வீடுகளோ, வாழ்வாதாரங்களோ, பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை ராஜபக்ஷ அரசு ஆக்கிரமித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாது ராஜபக்ஷ அரசு இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டபடி காணிகளைச் சுவீகரித்து வருகின்றது.
பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாகச் செலவிடப்பட்ட பெரும்தொகைக் கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து நீண்டகாலமாகியும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ராஜபக்ஷ அரசு உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இன்றும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரமோ, வீடுகளோ இல்லை. போதுமான உணவோ, சுய மரியாதையோ, பாதுகாப்போ இன்றி அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். குறிப்பாகப் பெண்களும், பிள்ளைகளும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர்.
யுத்தத்தால் இறந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் நீதியும் இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்ஷ அரசு தமிழ்பேசும் மக்களுக்கு மோசமான துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே வழங்கியுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வணக்கஸ்தலங்கள்மீது தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளித்தது. அத்தோடு நில்லாமல் தாம் அரங்கேற்றிய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கவும் முயன்றது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம்.
பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாய், சமத்துவமாய், சுய கௌரவத்துடன் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு சகல இன மக்களுடனும் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது த.தே.கூ. வின் கருத்தாகும்.
எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும்,நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களும் தமது வாக்குகளை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் முதல் இடம்

வெளியாகியுள்ள 2014 ஆண்டிற்கான க.பொ.த.உயர்தரப்பரீட்சை
பெறுபேற்றில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி. சிவலிங்கம் நேரூஜா வர்த்தக பிரிவில் மூன்று பாடங்களிலும்  அதிவிசேடசித்திகளைப் (3A) பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று இப் பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமைசேர்த்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு வாவிகளில் பெருமளவு முதலைகள்!

கிழக்கு மாகாணத்தில் கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து, முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெல்லாவெளி மற்றும் மாவடிப்பள்ளி வாவிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. வெள்ளத்துடன் இவை இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
READ MORE | comments

இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் !

நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறினார்.
தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியபமானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

READ MORE | comments

கூட்டமைப்பின் முடிவு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
கூட்டமைப்பின் இந்த முடிவு இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு, ஹெவலொக் டவுன், ஜானகி ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும்.
இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?' என்ற கேள்விக்கான பதிலை தென்னிலங்கை சமூகமும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
அதேவேளை, தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவும், அரச தரப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் நிமித்தம் புதுடில்லியில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. நேற்று முன்தினம் கொழும்பு வந்த கையோடு தனது கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்தினார்.
இதன்போது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த வாரங்களில் வடக்கு, கிழக்கில் நடத்திய மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட ஒருமித்த கருத்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேற்படிக் கூட்டத்தின் இறுதியில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவை  இன்று நடைபெறும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். 
 இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கமைய தமிழ் மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
READ MORE | comments

மட்டக்களப்பு வாழைச்சேனையில் மைத்திரி

Monday, December 29, 2014

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்…Ms-Valaichchenai Ms-Valaichchenai-01

Ms-Valaichchenai-03Ms-Valaichchenai-02

Ms-Valaichchenai-04

Ms-Valaichchenai-05

Ms-Valaichchenai-06

Ms-Valaichchenai-08

Ms-Valaichchenai-09

Ms-Valaichchenai-10
Ms-Valaichchenai-11Ms-Valaichchenai-12
READ MORE | comments

162 பேருடன் மயமான சிங்கப்பூர் விமானம்! அமெரிக்காவின் சதி?

162 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் திடீரென நடுவானில் மாயமானது. அதன் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படையும் களமிறக்கப்பட்டது. தற்போது இந்த விமானம் பெலிடங் தீவிலிருந்து 80 முதல் 100 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது.
விமானத்தில் மொத்தம் 162 பேர் இருந்துள்ளனர். அதில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஆவர். பிரித்தானிய நேரப்படி நேற்று (27.12.14) இரவு 11.17 மணியுடன் விமானத்திற்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு விமானம் என்ன ஆனது என தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அரசும் அதன் துணை நாடுகளும் உலக மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களில் அமெரிக்க அரசின் கரங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. கடந்தவாரம் மலேசிய விமானம் காணாமல் போனது தொடர்பாக பிரஞ்சு நாட்டு எழுத்தாளர் ஒருவர் புதிய தகவல்களை வெளியிட்டிருந்தார்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு மார்ச் மாதம் 8ம் திகதி, 2014 ஆம் ஆண்டு நள்ளிரவு கடந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகப் புறப்பட்ட என்ற விமானம் காணாமல் போனது. அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்தது எனத் தகவல்கள் வெளியாகின.
இவ்விமானம் அமெரிக்க இராணுவத்தாலேயே சூட்டு விழுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.போர்தூஸ் ஏர்லைன்ஸ் என்ற பிரஞ்சு நாட்டின் உள்ளூர் விமான சேவை ஒன்றின் முன்னைநாள் அதிபர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பிரபல பத்திரிகையன பரிஸ் மச் இல் வெளியான ஆறு பக்கக் கட்டுரை ஒன்றில் அதற்கான ஆதரங்களை அவர் முன்வைத்திருந்தார். பிரித்தானியாவினால் ஆக்கிரமிக்கப்படு அமெரிக்க இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள டியகோ கார்சியா என்ற தீவை அண்மித்த போதெ விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு விழுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
டியாகோ கார்சிய அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த விமானம் செல்வதாகச் சந்தேகித்தே அமெரிக்க இராணுவம் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது என அவர் தெரிவித்த கருத்து அமெரிக்காவைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
டியாகோ கார்சியாவிற்கு அருகாமையிலுள்ள மாலைதீவின் தீவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் விமானம் தாளப்பறந்தைக் கண்டதாகவும், பாராஹ் தீவு என்ற அந்த இடத்தில் விமானத்தின் பாகம் ஒன்ற மாலைதீவு இராணுவம் கைப்பற்றியது தொடர்பான புகைப்படத்தை தீவின் மேயர் காண்பித்ததாகவும் கூறுகிறார்.
விமானம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க வேண்டாம் என பிரித்தானிஅ உளவுத்துறையல் எச்சரிக்கப்பட்டதாகவும், அதனை உளவுத்துறையிடமே விட்டுவிடுமாறு கோரியதாகவும் தெரிவிக்கிறார்.
மார்க் டூகான் என்ற முன்னை நாள் விமானச் சேவை அதிகாரியன இவரின் கூற்று வெளியான சில நாட்களுக்கு உள்ளாகவே மற்றொரு விமானம் மாயமகியுள்ளது.
READ MORE | comments

தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்! மட்டக்களப்பில் மைத்திரி - ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு:

சகல இன மக்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பக்கம் வருகின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடனடியாக எனக்கு ஆதரவு வழங்கி எனது பக்கம் வரவேண்டும் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேர்தல் பிரட்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மறை்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுகிறார்.
எனவே மட்டக்களப்பு மக்களே! நீங்கள் இப்படிப்பட்ட ஜனாதிபதியைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லத எமது நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா? சிந்தியுங்கள்.
எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றியே எனக்கு ஆதரவு வழங்கி எங்களது கட்சியில் வந்து சகல மக்களும் ஒன்று சேர்கிறார்கள்.
மேலும் நாங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற எந்தக் கட்சியுடனுமே எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இனறியே எமக்கு  ஆதரவு வழங்குகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நாங்கள் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை.
இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.
இன்னும் காலம் தாழ்த்தாமல் எனக்கு ஆதரவு வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு: மைத்திரியும் பங்கேற்பு
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
இதனையடுத்து அமைச்சுப் பதவியைத் துறந்த ஹக்கீம் உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவளிக்கும் வகையில் கலந்து கொண்டார்.
மைத்திரிபாலவின் மேடையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏறிய முதலாவது நிகழ்வாக அது அமைந்திருந்தது. இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொத்துவிலுக்கு வருகை தந்த ஹக்கீமுக்கு அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
மொத்தமாக சுமார் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையில் மலர் மாலைகளும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுகளில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொத்துவில் மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
பொத்துவிலில் நடைபெற்ற குறித்த பொதுக் கூட்டத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.READ MORE | comments

கல்முனையில் திரண்ட மக்கள் வெள்ளம்: மைத்திரிக்கு வரலாறு காணாத ஆதரவு

கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாகவே இக் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்ததாக உளவுப் பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆளுந்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சியாக அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் கூட இவ்வாறான ஒரு மக்கள் வெள்ளம் பொதுக்கூட்டமொன்றுக்கு திரண்டு வந்ததில்லை என்று கூறப்படுகின்றது.READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |