Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் ஏமாற்றப்பட்ட பெண்கள் மோகனுக்கு எதிராக ஆர்பாட்டம்;

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காணி
பெற்று தருவதாக கூறி பல லட்சம் ருபா மோசடி செய்த செங்கலடி செல்லம் பிரிமியர் தியட்டர் உரிமையாளரும் ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளருமாகிய மோகனுக்கு எதிராக ஆர்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.

ஏழைப் பெண்களிடமும் தமிழ் மக்களிடமும் தளவாய் சவுக்கடி பிரதேசங்களில் காணி பெற்றுத்தருவதாக கூறி கடந்த 1 வருடமாக 300 க்கு மேற்பட்டோரிடம் 1 ஏக்கர் காணி எழுத்துக்கூலிக்காக 10000 -20000 வரை காசு பெற்று அரச காணிகளையும் உரிமை கோரப்படாத மக்களின் காணிகளையும் தருவதாக கூறி பல லட்சம் ருபா பணத்தினை பெற்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வந்த வேளை குறித்த காணிகளை வேறு சில இஸ்லாமிய சகோதரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து தான் தப்பித்துக் கொள்வதற்காக ஜக்கியதேசிய கட்சியில் இணைந்து கொண்டதாகவும் ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்ட மக்கள் கூறினர்.


குறித்த மோசடியினை மேற் கொண்ட மோகனுக்கு நீதியான விசாரiகைளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அவலப் பெண்களுக்கு நீதியை பெற்றுத்தருமாரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்



Post a Comment

0 Comments