கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாகவே இக் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்ததாக உளவுப் பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆளுந்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சியாக அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் கூட இவ்வாறான ஒரு மக்கள் வெள்ளம் பொதுக்கூட்டமொன்றுக்கு திரண்டு வந்ததில்லை என்று கூறப்படுகின்றது.








0 Comments