
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கை துரோகி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் சல்மான்கான். இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என்றார் காட்டமாக. ADVERTISEMENT இலங்கையைச் சேர்ந்தவரும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்சேவுக்காக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்து அனைவரையும் அதிரவைத்துள்ளார் சல்மான் கான்.
3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்காக சல்மான் கான் பிரசாரம் செய்தது தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் பரவவைத்துள்ளது. இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரசாரம் செய்ததற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் வைகோ அவரை நம்பிக்கைத் துரோகி என்று கடுமையாக சாடியுள்ளார்.
0 Comments