பாலியல் உறவு தொடர்பான சட்டமூலம் மீளப்பெறப்பட்டது

Sunday, March 24, 2024

 


நான்கு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (23) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பாலானோர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரினார். இது குறித்து தொடர்ந்து கலந்துரையாடப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என சட்டமா அதிபருக்கு அறிவித்தேன். மாறாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்திலும் இது மீளபெறப்படும்” என்றார்.

READ MORE | comments

பாடசாலை புத்தகப்பை எடை குறித்து கல்வி அமைச்சர்

Saturday, March 23, 2024

 


பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊவா மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சந்தையில் கொடிய விஷக் கிரீம்கள்

Friday, March 22, 2024

 


கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் என கூறி குறித்த கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.

இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது, அவர் பெயர் குறிப்பிட்டே ‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் முகத்தினை வெண்மையாக்கும் க்ரீம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த க்ரீமினை பாவிக்க வேண்டாம் என்றும், இதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தோம். இதில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை. மேற்கூறப்பட்ட க்ரீமினால் நிச்சயமாக புற்றுநோய் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக பயன்படுத்தப்படுகின்றது.

சில கிரீம்கள் இலங்கையின் பிரபல அழகுக்கலை பார்லர்களில் விற்பனைக்கு கூட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

இலங்கைக்கு கடன் நிவாரணம்

 


இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

READ MORE | comments

சுகாதார ஊழியர்கள் நாளை தொழில்முறை நடவடிக்கையில்

Monday, March 18, 2024

 


நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார ஊழியர்கள் உறுதியளித்துள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதி வழங்குவது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை சுகாதார அமைச்சகம் மார்ச் 5 ஆம் திகதி நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஒப்புதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பானது அக்காலப்பகுதியில் வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையின் அங்கீகாரம் நாளுக்கு நாள் தாமதமாகி வருவதாகத் தோன்றுவதால், கடந்த 14ஆம் திகதி கூடிய சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மீண்டும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இன்று (18) சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கை மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

பாடசாலைகளில் 08 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு புதிய மாற்றம்

Wednesday, March 13, 2024

 


பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு

தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் 19 திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் இதன் மூலம் சர்வதேச தரத்திற்கமைவாக இந்நாட்டு மாணவர்களுக்கு பாட அறிவை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

“ஜுன் மாதம் முதல் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணம்”

Tuesday, March 12, 2024


 அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் இந்த மாதம் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது

தற்போது, சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார்

Monday, March 11, 2024

 


திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அடுத்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

மாணவர்களுக்கு திறன் மற்றும் விருப்புகளுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைய வாய்ப்பு - சுசில்

Monday, March 4, 2024

 


04-03-2024

எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரம் எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


அதற்கமைய, முன்னோடி திட்டமாக 20 பாடசாலைகளில் இந்த திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயாராகும் பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.


புலமைப்பரிசில் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்படும் ஆனால் போட்டியைக் குறைக்க தேவையான சூழல் தயார் செய்யப்படும்.


வகுப்பறைக்கு வெளியில் உள்ள செயல்பாடுகளுக்கு மாணவர்கள் காட்டும் திறமைகளை அங்கீகரித்து அந்த திறன்களுக்கான மதிப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தற்போதைய பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் எனவும், எஞ்சிய மூன்று பாடங்களை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்

 


கொழும்பு, நுகேகொடையில் அமைந்துள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் இராணுவத்தின் சிவில் வேலைகளுக்காக என அனுப்பி வைத்த 17 இலங்கையர்களை அந்நாட்டு இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியை தடுத்து அதிலிருந்து விடுபட்டு நேற்று(03) கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

அவர்களில் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ ஆகிய இடங்களில் வசிக்கும் Hardware கடைகளில் வேலை செய்பவர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் என உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த அவர்கள், இந்த ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

இந்த பயணத்திற்காக ஒரு நபருக்கு சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற உள்ளதாகவும் கூறினார்கள். பணத்தைத் திரும்பப் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி ஊடகங்களை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு விரைவாக குறித்த தரப்பினர் வெளியேறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |