Home » » தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்

தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்

 


கொழும்பு, நுகேகொடையில் அமைந்துள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் இராணுவத்தின் சிவில் வேலைகளுக்காக என அனுப்பி வைத்த 17 இலங்கையர்களை அந்நாட்டு இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியை தடுத்து அதிலிருந்து விடுபட்டு நேற்று(03) கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

அவர்களில் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ ஆகிய இடங்களில் வசிக்கும் Hardware கடைகளில் வேலை செய்பவர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் என உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த அவர்கள், இந்த ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

இந்த பயணத்திற்காக ஒரு நபருக்கு சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற உள்ளதாகவும் கூறினார்கள். பணத்தைத் திரும்பப் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி ஊடகங்களை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு விரைவாக குறித்த தரப்பினர் வெளியேறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |