2024 உலகக்கிண்ண தொடரில் தகுதி பெற்ற உகண்டா

Thursday, November 30, 2023


 2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும்.

2024 டி20 உலகக்கிண்ண மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20 அணிகளின் பட்டியல் :

மேற்கிந்திய தீவுகள்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
நெதர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
இலங்கை
ஆப்கானிஸ்தான்
வங்கதேசம்
அயர்லாந்து
ஸ்காட்லாந்து
பப்புவா நியூ கினியா
கனடா
நேபாளம்
ஓமன்
நமீபியா
உகண்டா.

READ MORE | comments

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பு

 


அச்சடிக்கும் இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் குவிந்து கிடக்கும் சுமார் 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பணம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் மோசடி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

க.பொ.த (உ.த) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பம் கோரல்

Wednesday, November 29, 2023

 




க.பொ.த (உ.த) பரீட்சை - 2023 க்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பம் 

முடிவுத் திகதி - 19.12.2023.

கீழுள்ள Link ஐ Click செய்யவும்

https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/

READ MORE | comments

இலங்கை கிரிக்கெட் அணிக்கான 2024 போட்டி அட்டவணை

 


இலங்கை தேசிய கிரிக்கெட் (ஆண்கள்) அணியின் 2024 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புத்தாண்டில் சிம்பாப்வே அணியுடன் முதல் போட்டியை இலங்கை நடத்தவுள்ளது.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற போட்டிகளின் அட்டவணை கீழே;



READ MORE | comments

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை அல்லது நாளை மறுநாள்

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (1) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

READ MORE | comments

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை

 


தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, தென்,வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, ஊவாமற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீஅளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

READ MORE | comments

Tuesday, November 28, 2023

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு எல்லாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்

READ MORE | comments

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

Monday, November 27, 2023

 


பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய சிறப்புரிமைக் குழு இன்றும் (27) நாளையும் (28) நாளை மறுதினமும் (29) கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் முன்னுரிமை வழங்கி விசாரிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவிற்கு எதிரான முறைப்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

READ MORE | comments

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று போராட்டம்


 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (27) அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என அதன் அழைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்திருந்தார்.

20,000 சம்பள அதிகரிப்பு, அதிகரிக்கும் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை ஜனவரி முதல் சம்பளம் வழங்குதல், 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமையை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சிறந்த பதில் வழங்காவிடின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

காய்ச்சல், இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

Saturday, November 25, 2023


 காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி, முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நாட்களில் தீவின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

அகில இலங்கை நடன போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரி!!

 




(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


அனுராதபுரத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான சமஸ்தலங்கா அகில இலங்கை நடன போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் மேல் பிரிவு குழுநடன (தைந்நீராடல்) மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இக்கல்லூரியின் சார்பில் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மேல் பிரிவை சேர்ந்த தைந்நீராடல் மற்றும் தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த நிலையில் குழுநடனத்தில் போட்டியிட்ட தைந்நீராடல் நடன குழு மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று கல்லூரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி நித்தாஞ்சலி அவர்களின் வழிகாட்டலில், நடன  ஆசிரியை திருமதி.பி.விஜயசேகரன், ஆசிரியை திருமதி ரீ.நிஷாந்தன், மாணவி பீ.பிரதாயினி ஆகியோரின் கடின முயற்சியினாலும் இந்த வெற்றி பெறப்பட்டதென பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி ஜனவரி முதல்?

 


அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து ஐயாயிரம் ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச 2500 ரூபா அதிகரிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

கிரிக்கெட் விவகாரம் – திங்கள் தீர்ப்பு?

Friday, November 24, 2023

 


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டது.

READ MORE | comments

“போராட்டம் மக்களுக்கு கசப்பாக மாறியுள்ளது”

Thursday, November 23, 2023

 


போராட்டம் மக்களுக்கு கசப்பாக மாறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் தற்போது சுதந்திரமாக உறங்கவும் சுவாசிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் தவறு செய்தால் ஜே.வி.பி.க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை வழங்க வேண்டும் எனவும், அதனை எதிர்க்க வேண்டும் எனவும், ஆனால் இராணுவத்தினரின் மனஉறுதியை குறைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

காவல்துறையின் மீது கிராமத்தின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், காவல்துறையின் மரியாதைக்குரிய பெயரையும் நம்பிக்கையையும் மக்களிடம் மீட்டெடுக்க விரிவான திட்டத்தில் அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

READ MORE | comments

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

 


அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24) மாலை 5 மணி முதல் மறுநாள்(25) காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

2024ல் இரண்டு தேர்தல்கள்

Wednesday, November 22, 2023

 


ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கு நன்றி.”

“அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு மற்ற தேர்தல்களை நடத்துவேன்.”


READ MORE | comments

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தரம் 10 இல்

 


நான்கு வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, 10ம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை அழைக்க உத்தரவு

 


பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்

Tuesday, November 21, 2023

 


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள்

Saturday, November 18, 2023

 


2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்

Friday, November 17, 2023

 


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் தமது மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை முறையில் குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்

Thursday, November 16, 2023

 


நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாழடைந்த கட்டிடங்களும் அடையாளம் காணப்பட்டு அவை அகற்றப்பட்டு புதிய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமது பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறான கட்டடங்களில் இருந்து மாணவர்களை வெளியேற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

அரச ஊழியர்களின் சம்பளம் – அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும்

 நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரி


விக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.

துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

2024 வரவு செலவுத்திட்டம் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது. கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.” என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதம்

 


நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் இந்த வருடத்தில் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 22,000 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுதுடன் அதில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

வெல்லம்பிட்டி பாடசாலையில் விபத்து – விசாரணைக்கு குழு நியமனம்

 


வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் மதில் சுவரொன்று உடைந்து வீழ்ந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எயார் மார்சல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.


 இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

READ MORE | comments

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வார இறுதியில்?

 


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட பரீட்சைகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இந்தியா பந்துவீச்சிலும் கலக்கும் ரகசியம் என்ன? பந்தில் ஏதும் 'மாயம்' செய்தார்களா?

Tuesday, November 14, 2023

 


நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் ஆட்டங்களிலும் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல், தொடர் வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உள்நாட்டில் நடக்கும் போட்டித் தொடர், ரசிகர்களின் ஆதரவு, ஆடுகளம், மைதானம் குறித்த நல்ல புரிதல் ஆகியவை இந்திய அணிக்கு இயல்பாகவே சாதகமான காரணிகளாக அமைந்துவிட்டன.

அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் 7 முதல் 8 வீரர்கள் வரை உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். இதுதான் கோப்பையை வெல்ல சரியான தருணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வறண்டு கிடக்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

செய்துள்ளதாக நினைக்கிறேன், 3-வது நடுவரும் இந்திய அணிக்கு உதவி வருவதாக நினைக்கிறேன்," என்றார் ராஸா.

"ஆதலால், இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் பந்து நன்றாக ஸ்விங் ஆவதற்காக கூடுதலாக பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்,” என சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார்.

ஹசன் ரஸாவுக்கு வாசிம் அக்ரம் பதிலடி

ஆனால், ஹசன் ராஸாவின் சந்தேகத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் ஒரு பதிலடி கொடுத்திருந்தார்.

அவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணியின் வெற்றி குறித்து சிலர் சந்தேகம் கொண்டு அளித்த பேட்டிகளை நான் பார்த்தேன், நகைச்சுவையாக இருந்தது. இதுபோன்றவர்கள், உலகின் முன் தங்களையும் அவமானப்படுத்துவதோடு, பாகிஸ்தானையும் அசிங்கப்படுத்துகிறார்கள்," என்றிருந்தார்.

மேலும், "பந்தைத் தேர்வு செய்யும் முறை என்பது எளிதானது. 4-வது நடுவர் 12 பந்துகள் நிறைந்த பெட்டியுடன் மைதானம் வருவார். எந்த அணி டாஸ் வென்றதோ அந்த அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தால், இரு பந்துகளை கள நடுவர்கள், 3-வது நடுவர் முன் கேப்டன் தேர்ந்தெடுப்பார்," என்றார் அக்ரம்.

"கள நடுவர் ஒரு பந்தை வலது பையிலும், மற்றொரு பந்தை இடது பையிலும் வைத்துக் கொள்வார். மற்ற பந்துகளை 4-வது நடுவர் எடுத்துச் சென்றுவிடுவார். இதுபோன்று 2-வது இன்னிங்ஸில் பந்துவீசும் அணியின் கேப்டனும் இரு புதிய பந்துகளைத் தேர்ந்தெடுப்பார், அதைக் களநடுவரிடம் காண்பிப்பார். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களுக்காக வித்தியாசமான பந்து அளித்து ஐசிசி உதவுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியி்ட்டது யார் எனத் தெரியவில்லை,” எனத் தெரிவித்திருந்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளை உலகின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்துவரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் சந்தேகம் எழுப்பியிருப்பது சமூகவலைத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பியது.

ஆனால், அடிப்படையில் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

வெள்ளைப் பந்துகள் தொடக்கத்தில் கடினமாக இருக்கும், சிவப்புப் பந்துகளைவிட அதிகமாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டவை. ஆனால், 5 ஓவர்களுக்குப்பின், பந்தின் தன்மை மாறி, அதன் கடினத்தன்மை குறையத் தொடங்கும், ஸ்விங் ஆவதும் குறையும்.

இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் 35 முதல் 36 ஓவர்கள் என்று அளவுகோல் வைத்திருந்தனர். அந்த ஓவர்கள் வந்தபின், பந்தை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அதன் தேய்மானத்துக்கு ஏற்றாற்போல் வேறு பந்தை நடுவர்கள் வழங்குவார்கள்.

2011-ஆம் ஆண்டு ஐசிசி புதிய விதியைக் கொண்டுவந்தபின் ஒரு இன்னிங்ஸ்கிற்கு 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

மாற்றப் பரிந்துரைப்பார்கள்.

அவ்வாறு பந்து மாற்றப்படும் சூழலில் நடுவர்கள் இருவரும் பேட்டர்களிடமும், கேப்டனிடமும் முறைப்படி தெரிவிக்க வேண்டும். பந்தை மாற்றுவதற்கு முன், பந்து விளையாடுவதற்கான தகுதியை இழந்துவிட்டது, எடையிழந்து, உருவமிழந்துவிட்டது என்பதை உறுதி செய்தபின்புதான் மாற்ற வேண்டும் என்று ஐசிசிபந்தை ஆய்வு செய்ய தனியாக 'பால் கேஜ்' என்ற வளையம் இருக்கிறது. அந்த வளையம் மூலம் பந்தின் அளவைப் பரிசோதிப்பார்கள். அதாவது ஒரு வளையம் பந்தின் சுற்றளவைவிட பெரிதாகவும், மற்றொரு வளையம் பந்தின் சுற்றளவைவிட சற்று சிறிதாகவும் இருக்கும்.

இந்த பெரிய வளையத்துக்குள் பந்து எளிதாகச் சென்றாலோ அல்லது குறைந்தபட்ச சுற்றளவுள்ள வளையத்துக்குள் பந்து செல்லாமல் இருந்தாலோ பந்து அதன் உருவத்தில் மாறியுள்ளது என்று நடுவர்கள் முடிவு செய்யலாம். இந்த நிலை வந்துவிட்டால் பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவெடுப்பார்கள்.

ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகள் மாற்றப்படும் முறை குறித்து எம்.ஆர்.எஃப் துணை பந்துவீச்சுப் பயிற்சியாளரும், டி.என்.பி.எல் லீக்கில் பால்சே திருச்சி அணியின் பந்துவீச்சுப்பயிற்சியாளராகவும் இருக்கும் எட்வார்ட் கென்னடி பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிவப்பு பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டபோது இருந்த பந்துகளின் தரம் இப்போது இல்லை, கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவும் பொழுதுபோக்கு அம்சத்துடனும் கொண்டு செல்வது, ஆகியவற்றுக்காக இரு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தேய்ந்த பந்தை மாற்றும்போது குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன," என்றார்.

மேலும் பேசிய அவர், "2 புதிய பந்துகள் வந்தபின் பந்து தேய்ந்துவிட்டது, கிழிந்துவிட்டது என்று பந்துவீசும் அணி குறை சொல்ல முடியாது. பந்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் பந்துவீசும் கேப்டனே முடிவு செய்வதால், பந்தை இடையில் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை,” எனத் தெரிவித்தார். தெரிவித்துள்ளது.

இதற்கு முன் என்ன நடைமுறை?

இரண்டு பந்துகள் பயன்படுத்தும் முறைக்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்து பயன்படுத்தப்பட்ட முறை குறித்து எட்வார்ட் கென்னடி பேசுகையில், “ 2011-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகளில் 36 முதல் 37 ஓவர்கள்வரை ஒரு பந்து வீசப்படும். அதன்பின், தேவைப்பட்டால் நடுவர்கள் ஆய்வுக்குப்பின், மீதமுள்ள 12 அல்லது 13 ஓவர்களுக்கு வேறு தேய்ந்த பந்து பயன்படுத்தப்படும்," என்றார்.

"அதிலும் பந்துவீசும் அணியின் கேப்டன், பந்துவீச்சாளர் பந்து தேய்ந்துவிட்டது, வடிவத்தை இழந்துவிட்டது என்று புகார் செய்தால்தான் பந்து மாற்றப்படும். அவ்வாறு புகார் செய்தால் இரு நடுவர்களும் பந்தை ஆய்வு செய்து, அதை அளவீடு மூலம் பந்தின் தரத்தை உறுதி செய்தபின்புதான், வேறு பந்து பயன்படுத்தப்படும்," என்றார்.

இந்திய அணி பிரத்யேகமாக பந்தை தேர்வு செய்ய முடியுமா?

பாகிஸ்தான் வீரர் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து எட்வார்ட் கென்னடி கூறுகையில், “பாகிஸ்தான் வீரர் கூறும் குற்றச்சாட்டு போன்று கிரிக்கெட்டில் நடக்க வாய்ப்பு ஒருபோதும் கிடையாது. இது ஐசிசி நடத்தும் சர்வதேசப் போட்டி, இந்திய அணி பந்தை தேர்ந்தெடுத்து கொண்டுவர முடியாது," என்றார்.

"ஐசிசிதான் பந்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருகிறது. இதில் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக செயல்படுவது என்பது கற்பனையான வாதம். கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலில் இதுபோன்ற குற்றச்சாட்டு அபத்தமானது. இதுபோன்று இந்திய அணிக்கு மட்டும் சாதகமாக வித்தியாசமான பந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு வாய்ப்பு கிடையாது,” எனத் தெரிவித்தார்.



READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |