(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
அனுராதபுரத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான சமஸ்தலங்கா அகில இலங்கை நடன போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் மேல் பிரிவு குழுநடன (தைந்நீராடல்) மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இக்கல்லூரியின் சார்பில் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மேல் பிரிவை சேர்ந்த தைந்நீராடல் மற்றும் தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த நிலையில் குழுநடனத்தில் போட்டியிட்ட தைந்நீராடல் நடன குழு மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று கல்லூரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி நித்தாஞ்சலி அவர்களின் வழிகாட்டலில், நடன ஆசிரியை திருமதி.பி.விஜயசேகரன், ஆசிரியை திருமதி ரீ.நிஷாந்தன், மாணவி பீ.பிரதாயினி ஆகியோரின் கடின முயற்சியினாலும் இந்த வெற்றி பெறப்பட்டதென பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 comments: