Thursday, February 28, 2019
இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வீசியுள்ளது. மேலும், இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே குண்டு வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இந்திய ராணுவ விமானம் பதிதாக்குதலுக்கு பாகிஸ்தானுக்குள் சென்றது.
நேற்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்த வீடியோவையும் வெளியிட்டனர்.
போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். டில்லியில் பணிபுரிந்து வருகிறார். அவரது பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர் என்றும் அவரது மாமா செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனையடுத்து,அபிநந்தனை கண்களை மூடி, கைகளை கட்டி ரத்தம் படிந்த முகத்துடன் இழுத்துச்செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்ததால், இந்திய மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.
அபிநந்தனை கண்களை மூடி, கைகளை கட்டி ரத்தம் படிந்த முகத்துடன் இழுத்துச்செல்லும்போதும் நெஞ்சை நிமிர்த்தி கெத்தாக நடந்துவரும் வீரத்தமிழன் அபிநந்தனின் செயல் உலகையே வியக்கவைத்தது. உயிர்போகும் நிலைமை வந்தால்கூட தாய்நாட்டிற்காக அடிபணியாமல் நெஞ்சை நிமிர்த்தி பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கேள்வி: உங்களுடைய பெயர் என்ன ?
பதில் :wing Commander அபினந்தன்.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி: நாங்கள் உங்களை நன்றாக நடத்தினோமா?
பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். அவர்களிடமிருந்து என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து, உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்?.
பதில்: என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.
தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன்.
தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன்.
கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
பதில் : ஆம் sir! ஆகி விட்டது.
கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.
கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?
பதில் : Sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?
பதில் : Sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ வீரத் தமிழன் என இந்தியர்கள் புகழ்ந்துவருகின்றனர்.