ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்
|
மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. எனினும், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
உலகின் சில நாடுகளது மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கரிசனை கொண்டுள்ளது. இலங்கையில் இராணுவத்தினர் அதிகளவான காணிகளை மக்களிடம் வழங்கி வரும் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது. ஆனாலும், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
|
0 Comments