Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூரில் மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவு!


ஏறாவூரில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொல்களங்களையும், மாட்டிறைச்சிக் கடைகளையும் இரு வாரங்களுக்கு மூடுமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பணிப்புரையை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏறாவூர் நகர சபை மற்றும் பற்று பிரதேச சபைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள 14 இறைச்சிக் கடைகள் நாளை (புதன்கிழமை) தொடக்கம் இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகள் காரணமாக அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு சுகாதாரமான மாட்டிறைச்சிகளை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments