Home » » மாகாண சபை தேர்தல்கள் இந்த வருட நடுப் பகுதியில்!

மாகாண சபை தேர்தல்கள் இந்த வருட நடுப் பகுதியில்!

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேனரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன.
இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் என பலரும் தேர்தலை நடாத்த வேண்டுமென கோரி வருகின்ற போதும் தேர்தல் நடாத்தப்படாமல் இழுபட்டுக் கொண்டே செல்கின்றது.
இவ்வாறானதொரு நிலைமையிலையே அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாண சனபை முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்தாவிட்டால் அநன்த மாகாண சபை முறைமை எதற்காக என்றும் அதற்கான தேர்தலை தொடர்ந்தும் நடாத்தாவிட்டால் அந்த முறைமையையே நீக்கலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு மாகாண சபைக்கான தோர்தல் நடாத்தப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்த ஆண்டுக்குள் மாகாண சனபைக்கான தேர்தல் நடாத்தப்படாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் இந்தப் பதவியில் இருந்தே தான் விலத்தப் போவதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளரான மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் அவ்வாறு உடனடியாக தேர்தலை நடாத்துவதற்குரிய சாத்தியங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் தேர்தலை நடாத்துவதாயின் ஆகக் குறைந்தது 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையாக உள்ளது.
ஆதனால் இத் தேர்தல் மே 31 ஆம் திகதியளவனில் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை. இவ்வாறானதொரு நனிலையிலையே மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியளவில் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தேர்தல் திணைக்கள தகவல்கனள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் மாகாணங்களுக்கான இத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியமானது. ஆனால் தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
இதே வேளை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றும் தேர்தலை நடாத்த தயார் என்றும் தேர்தலை சந்திக்க தயார் என்றும் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தாலும் தேர்தல் என்பது நடக்காமலே உள்ளது. ஆகவே இத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் உறங்குபவர்களை எழுப்ப முடியும் ஆனால் உறங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதென்பது போலவே கருதுவதாக தெரிய வருகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |