Home » » 1971 இந்திய- பாகிஸ்தான் யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக இந்திய ஜெட் விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல்

1971 இந்திய- பாகிஸ்தான் யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக இந்திய ஜெட் விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல்


1971 ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் யுத்தத்திற்கு பின்னர் முத்த தடவையாக பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைந்து இந்திய போர் விமானங்கள் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தமது விமானப்படை பதில் நடவடிக்கைகளை எடுத்தபோது இந்திய விமானங்கள் அவசரமாக குண்டுகளை போட்டுவிட்டு திரும்பிச்சென்று விட்டதாகவும் சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இந்தியா, “பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானின் வான் எல்லையை இந்திய விமானங்கள் மீறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய துருப்புகளும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்டகால நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு இருக்கும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
“இந்திய விமானப் படை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாக செயல்பட்டுவிட்டது” என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை விமானங்களை துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தது என அவர் டிவிட்டரில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
D0TOxK0XgAEGzDm
இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் விமானிகளை வணங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை விமானிகளின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
ஆனால், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |