இந்தோ பாகிஸ்தான் எல்லையில் கடும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமது F-16 போர்விமானங்கள் இந்திய வான்படையின் இரண்டுகலங்களை சுட்டுவீழ்த்தியதாக இன்று பாகிஸ்தான் படைத்தரப்பு உரிமைகோரியுள்ளது.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லையென இந்தியா மறுத்தாலும் சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து ஒரு விமானி கைதுசெய்யப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்திய விமானியென கூறப்படும் காயங்களுக்கு உள்ளான ஒருவரையும் அவரது குரலையும் காணொளி ஒன்றில் காட்டியுள்ளது.
அந்த காணொளியில்"என் பெயர் விங் கொமாண்டர் அப்ஹி நந்தன். என் சேவை எண்27981 . நான் ஒரு பைலட். என் மதம் இந்து மதம். ஏன ஆங்கிலத்தில் குறிப்பிடும்குரல் அதற்குமேலும்; விபரங்களை சொல்லும்படி பணிக்கப்பட்டபோது இவ்வளவுதான் இப்போதைக்கு சொல்லமுடியுமென அந்தக்குரல் குறிப்பிடுகிறது.
0 Comments