Advertisement

Responsive Advertisement

முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது வடக்கு


காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என்பன முடக்கப்பட்டுள்ளன.அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கிளிநாச்சி அரச பேருந்து சாலையில் அனைத்து பேருந்துகளும் தரிக்க விடப்பட்டுள்ளதுடன், சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் இன்று நடத்தப்படுடும் முழு அடைப்புப் போராட்டத்தினால், வுனியா மாவட்டம் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. இன்று வவுனியாவில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார், அரச பேருந்து சேவைகள் நடைபெறவில்லை. மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம் முற்றாக செயலிழந்துள்ளது. வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. திருநெல்வேலிச் சந்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீறி வர்த்தகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.(15)

24 25

Post a Comment

0 Comments