நாடளாவிய ரீதியாக உள்ள பாடசாலைகளில் ஒக்டோபரில் விசேட வேலைத்திட்டம்

Wednesday, September 27, 2023

 


ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 02 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்திற்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

மற்றொரு பெரிய வேலைநிறுத்தம் பற்றிய எச்சரிக்கை

 


அரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நாட்டை பொருளாதார ரீதியாக எவ்வாறு மீட்பது என்பது பற்றிய பகுப்பாய்வை முன்வைக்க அரசாங்கம் தவறிவிட்டது.

பொதுமக்களும், நாட்டு தொழிலாளர்களும் தங்கள் பெல்ட்டை இறுக்கிக் கொண்டாலும், எந்த பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை என ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

ஊழல், மோசடி, வீண் விரயத்தை தடுக்கும் இலட்சியம் அரசுக்கு இல்லை.

நிர்வாகத்தின் தரம் அன்று இருந்ததை விட இன்று மோசமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நவீன முடிவெடுப்பதற்குப் பதிலாக, நிலப்பிரபுத்துவ மற்றும் காலனித்துவ மனநிலையுடன் பழமைவாத முடிவெடுக்கும் நடைமுறைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக அரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றன.

1. ரூ.20000/- சம்பள உயர்வு பெறுதல்

2. தொழிற்சங்கங்களை ஒடுக்குவதை நிறுத்துங்கள்

3. பயங்கரவாதத் தடைச் சட்டம், ஊடக ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை மீளப் பெறுதல்

4. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பில் வெட்டுவதை நிறுத்தல்

5. அத்தியாவசிய சேவைகளுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்தல்

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் மேலும் கூறுகையில்,

6. மருந்துகள், வினைப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகள் தொடர்பான உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கான கோரிக்கைகளும் இதில் அடங்கும்.

READ MORE | comments

ஒலுவில் பிரதேச நெடுஞ்சாலையில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது




(அஸ்ஹர் இப்றாஹிம்)


அக்கரைப்பற்று- கல்முனை நெடுஞ்சாலையில் ஒலுவில் தென்கிழக்குபலகலைக்கழகத்திற்கு அண்மையில் மரமொன்று சரிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த கார் ஒன்றின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.

பாதையின் குறுக்கே பாரிய மரம் சரிந்து விழுந்ததில் வீதிப்போக்குவரத்திற்கு சிறிது நேரம் தடை ஏற்பட்டிருந்தது.
தெய்வாதீனமாக எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை.
பாரிய மரத்தை அகற்றும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர். 

READ MORE | comments

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கும், மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்குமிடையிலான 10ஆவது கிறிக்கட் சமர்

Monday, September 25, 2023

 



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கும், மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான கடின பந்து கிறிக்கட் சமர்   "Battle of the everest " 10 வது தடவையாக இடம்பெறவுள்ளது.

3 வருடங்களுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி மைதானத்தில் இம்மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

READ MORE | comments

தேசிய மட்ட மல்யுத்தத்த போட்டியில் தங்கம் வென்ற சிவானந்தா தேசிய பாடசலை!!

Friday, September 22, 2023

 







(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவன் கே.பவிசனே பலத்த போட்டிக்கு மத்தியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதேவேளை குறித்த பிரிவில் எஸ்.டிருஷாந்த், எஸ்.டிரோன் ஆகிய இரு மாணவர்களும் வெள்ளிப் பதக்கத்தையும் என்.நிருகாஷ், ஆர்.ருகேஷ்நாத் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தையும் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அதேவேளை குறித்த தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் Taekwondo விளையாட்டு பிரிவில் சிவானந்தா பாடசாலையை சேர்ந்த ஐ.சர்வகன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றியீட்டிய மாணவர்களையும் பாசாலையின் அதிபர் எஸ்.தயாபரன், பொறுப்பாசிரியர் ஆர்.தினேஸ்குமார் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான திருசெல்வம், ஆர்.கிசோத் ஆகியோரை பாடசாலை சமூகம் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

உறக்கத்தில் இருந்து மீண்டெழுந்த லேண்டர் – ரோவர்

 


நிலவின் தென்துருவத்தின் ஆய்வு பணிகளுக்கான இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பியுள்ள, சந்திரயான் 3 விண்கலத்தின் ஆய்வுகளை இன்று முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 14ம் திகதி நிலவின் தென் துருவத்தின் ஆய்வு பணிகளுக்காக சந்திரயான் 3 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த ஒகஸ்ட் மாதம் 23ம் திகதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது.

பின்னர் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், நிலவில் இரவு பொழுது ஆரம்பமானது.

இதனையடுத்து லேண்டர் உறங்கு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் நிலவில் பகல் ஆரம்பமாவதன் காரணமாக, உறங்கும் நிலையில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

READ MORE | comments

செயற்கை முட்டைகள் பற்றிய விசேட அறிவிப்பு

 


செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருவதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

வேலைநிறுத்தங்களை தடைசெய்யும் சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்தில் முன்மொழிவு

Thursday, September 21, 2023

 


மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பான பணிகளை நீண்டகாலத்திற்கு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் மதுர விதானகே பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

தொழில் உரிமைகளுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்புகளால் பெரும்பான்மையினரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையை இந்த சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்றும் மதுர விதானகே குறிப்பிட்டார்.

பிரேரணையை முன்வைத்த மதுர விதானகே, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளில் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.

பதுளை மாவட்ட சபை உறுப்பினர் சுதர்சன் தெனிபிட்டிய இந்த யோசனையை உறுதிப்படுத்தினார்.

READ MORE | comments

மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை இராணுவம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைத்தது

 


2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் இராணுவத்தினர் மட்டக்களப்பு வளாகத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இராணுவம் இருந்ததாகக் கூறிய ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணைகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அது திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

READ MORE | comments

விசேட வைத்தியர்களாக பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

Wednesday, September 20, 2023

 


பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

“பயிற்சி பெற்ற விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. ஒரு விசேட வைத்தியருக்கு பயிற்சி அளிக்க பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ஏனெனில் தற்போது ஆட்சேர்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விசேட வைத்தியர்ககளை நியமிக்கும் திறன் எங்களிடம் உள்ளது.

எதிர்காலத்தில் பெருமளவிலான விசேட வைத்தியர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். அந்த குழுவின் வருகையால் இந்த மோதல் சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.

சுமார் 600 வைத்தியர்கள் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இந்தக் குழுவிலிருந்து சிலர் வருவதில்லை. ஆனால் 50% வருவதால் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்கும். இன்னும் ஒரு வருடத்தில் அவர்கள் வருவார்கள்” என்றார்.

READ MORE | comments

துறைமுக நகரம் எதிர்வரும் 26 அன்று உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும்

Tuesday, September 19, 2023

 


கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்கனவே 17 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் பெயர் colombo financial city (கொழும்பு நிதி நகரம்) என மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் திலும் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் துறைமுக நகரத் திட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் முதலீட்டாளர்கள் பணிகளைத் தொடங்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

READ MORE | comments

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு


இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல்((Yoon Suk Yeol) தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு தற்பொழுது தென்கொரியா வழங்கி வரும் தொழிற்வாய்ப்புப் பிரிவுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்காலத்தில் இலங்கை இளைஞர்யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கொரிய ஜனாதிபதி தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை குறைப்பதற்காக இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய கொரிய ஜனாதிபதி காலநிலை மாற்றத்தைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (18) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தென்கொரிய ஜனாதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு தலைவருகளுக்குமிடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது. 1978 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தென்கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்ச்சியாக முன் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற

இணக்கப்பாட்டுடன், தொடர்பாடல்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் நீண்ட கலந்துரையாலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் விசேட அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தத்தை கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தற்போதும் இலங்கையின் இளைஞர் யுவதிகள் பெருமளவில் தென்கொரியாவில் தொழில் புரிகின்றனர் என்பதோடு அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றமைக்காக தென்கொரிய ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல் தென்கொரிய சேவைக் காலத்தின் பின்னர் தொழில் திறன் மிக்கவர்களாகவே அவர்கள் இலங்கை திரும்புவதாகவும், அதனால் அவர்களால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பு கிடைக்கும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்திருந்த அதேநேரம், டிஜிட்டல் மயமாக்கலில் ஆச்சர்யமாக விளங்கும் தென்கொரியாவை முன்னுதாரணமாக கொள்ள முடியும் என தென்கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விரைவில் தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஆகியோரும் இலங்கை மற்றும் தென்கொரிய உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார்.

READ MORE | comments

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

 


எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன;

“நவம்பர் 21 அல்லது 27 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சையை நடத்தாது, மூன்றாம் தவணையை முடிக்க முடிந்தால், 30.10.2023 முதல் 22.12.2023 வரை 8 வாரங்கள் எடுத்துக் கொண்டு 01.01.2024 முதல் 19.01.2024 வரை மூன்று வாரங்களில் பாடசாலை காலத்தினை முடிக்க முடியும். 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பமானால், பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவு செய்ய முடியும். அவ்வாறெனில், பெப்ரவரி 19 முதல் 2024ம் கல்வியாண்டுக்கான முதல் தவணையினை ஆரம்பிக்கலாம். உயர்தரப்பரீட்சை ஜனவரியில் எழுதவுள்ள மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் கொடுத்தால் மே மாதம் பெறுபேறுகளை வழங்கலாம். அப்படியானால், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பரீட்சையினை நடத்தலாம். அப்படியானால், பரீட்சை அட்டவணையை 2025 முதல் புதுப்பிக்கலாம்.”

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“திருமதி ரோஹினி கவிரத்ன ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான முன்மொழிவு பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதுகுறித்து அறிக்கை வெளியிடுவார்” என்றார்.

READ MORE | comments

தம்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து உத்திக கருத்து

 


நாட்டில் தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தான் சுடப்பட்டதாக தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,g

“இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள நடைமுறையின் கீழ் நான் தாக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இந்த நடைமுறை தவறானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த முறை தவறானது என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நம் நாட்டின் சமூக அமைப்பும் தவறானது, அரசியலும் தவறானது. அந்தத் தவறினால்தான் இன்று நாடு முழுவதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது”

READ MORE | comments

கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

Saturday, September 16, 2023

 


கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

READ MORE | comments

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

 


பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய ஆசிரியர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில், மாணவனின் தாய் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த மாணவன், குறித்த சந்தேக நபரால் தனது வீட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இம்மாதம் 6ஆம் திகதி பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் மாணவனின் தாய், பயிற்சி வகுப்பு நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் இல்லை என சந்தேக நபரின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை மற்றும் அவரது மகன் அங்கு இல்லாததை அறிந்த அவர், பொலிசில் முறைப்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் சிறுவனை பாலியல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கடந்த 12ஆம் திகதி வெலிகம பொலிஸாரின் நோட்டீசுக்கு அமைய சிறுவனும் சந்தேக நபரும் பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர் தன்னை கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக இங்கு சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

READ MORE | comments

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படும்

Thursday, September 14, 2023

 


பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன.

263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

புதியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

READ MORE | comments

அரச நிறுவனங்களும் இனி ONLINE

Tuesday, September 12, 2023

 


பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையவழி முறையில் பணம் செலுத்தும் முறையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல நிறுவனங்களை மையப்படுத்தி அதற்கான முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

SVAT இனை படிப்படியாக நீக்க அமைச்சரவை அனுமதி


 ஒரு வலுவான வரித் திருப்பிச் செலுத்தும் வழிமுறை நிறுவப்படும் வரை, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) படிப்படியாக வெளியேற்றப்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

இதன்படி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது, ​​எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை நீக்குவது தொடர்பான விதிகளின் அமுலுக்கு வரும் திகதியை 2025.04.01 ஆம் திகதியுடன் திருத்துவதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

READ MORE | comments

மீண்டும் அரசியலில் மாற்றம்.. அமைச்சுப் பதவிகள் பல மாறுகின்றது

Monday, September 11, 2023


 இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வெளிநாடு செல்ல தயாராகி வருவதே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் 08 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

எனினும் அமைச்சரவை மாற்றத்தில் நான்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்களின் விடயதானங்களை நீக்கி புதிய அமைச்சுக்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை இராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் அதில் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

READ MORE | comments

‘பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி’

 


பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் என கோருபவர்களும், அதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களும் தற்போதைய அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செனல் 4 வெளிப்படுத்தலுக்கமைய, பிள்ளையானும், ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே சிறைச்சாலையில் இருந்துள்ளனர்.

பிள்ளையான் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு என்பது புலப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சினால் பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு நீண்டகாலமாக 35 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை எதற்காக வழங்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

எனவே, இந்த தாக்குதல்கள் குறித்து சுயாதீனமாக விசாரணையொன்று அவசியமாகின்றது.

அத்துடன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இத்தகைய சதிகளை மேற்கொண்டு, இனவாதத்தை தூண்டிவிடுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

READ MORE | comments

கலால் சட்டத்தில் விரைவில் திருத்தம்

Sunday, September 10, 2023

 


கலால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது கலால் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

READ MORE | comments

ஒரு வகுப்பறைக்கான மாணவர்களின் எண்ணிக்கையும் மாறும் சாத்தியம் By

 


பாடசாலையொன்றில் ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை உள்வாங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் வகையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தயார் என ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலையின் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவால் வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் இது அந்த வரம்பை மீறும் மாணவர்களை அனுமதிக்க அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.

நீதிமன்ற உத்தரவு 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 35 ஆக மட்டுப்படுத்தியுள்ளதாகவும், புதிய அமைச்சரவை பத்திரம் நீதிமன்ற உத்தரவையும் மீறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் பிரபல பாடசாலைகளின் வகுப்பறைகளில் கடுமையான நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

READ MORE | comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்

Monday, September 4, 2023

 


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு நேற்று (03) தெரிவித்தார்.

இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் 20,000 ஆசிரியர்களும், 1,100 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த பரீட்சை, இந்த ஆண்டு ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

READ MORE | comments

மெனிங்கோகோகல்’ பற்றி சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு

Saturday, September 2, 2023

 


பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே ‘மெனிங்கோகோகல்’ பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் இருந்து பதிவாகிய மற்றைய நோயாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும், அவர் ஜா-அல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அத்திடிய பிரதேசத்தில் பணியாற்றியவர் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

‘மெனிங்கோகோகல்’ பாக்டீரியா தொற்று கொழும்பிலும் பரவியுள்ளதாக சில ஊடகங்கள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன கூறுகிறார்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வருடங்களில் இந்நோய் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு வந்து உயிரிழந்த சிறு குழந்தைக்கு இந்த நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அந்த குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படவில்லை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிரியல் நிபுணரான டொக்டர் லிலானி கருணாநாயக்க, மெனிங்கோகோகல் பாக்டீரியா எவ்வாறு தொற்றுகிறது என்பதை விளக்கினார்.

“இது பாக்டீரியாவால் ஏற்படும் நோய். இது சளி மற்றும் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. இது நெருங்கிய மக்களிடையே பரவுகிறது. இது சமூகத்தை விட குடியிருப்பாளர்களிடையே அதிகம் பரவுகிறது.

மிக நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கும் இது பரவுகிறது. அறிகுறிகளின் அடிப்படையில், மூளைக்காய்ச்சல் ஒரு சிக்கலாகும். கூடுதலாக, நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

இதற்கான வகைகள் நம் நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இங்கு பி மற்றும் சி என இரண்டு வகைகள் மட்டுமே உள்ளன. இது இலங்கையில் ஒரு தொற்று நோயாக இருக்கப் போகிறது, அது ஒரு தொற்றுநோயாகப் பரவாது…”

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |