இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வெளிநாடு செல்ல தயாராகி வருவதே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் 08 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
எனினும் அமைச்சரவை மாற்றத்தில் நான்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்களின் விடயதானங்களை நீக்கி புதிய அமைச்சுக்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை இராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் அதில் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments: