Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய வருடார்ந்த திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.


மட்டு மாநகரின் தெற்கே  அனைத்து வளங்களாலும் சிறப்புற்றுவிளங்குகின்ற பழம் பெரும் கிராமமாக குருக்கள்மடம் கிராமம் விளங்குகின்றது. இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்த  வணக்கத்திற்குரிய சுவாமி ஜீ ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களினால்  ஸ்தாபிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்ற ஸ்ரீ கிருஸ்ணன் பெருமாளுக்கு அலங்காரத் திருவிழா பெற்று வருகின்றது.

அந்த வகையில் 22.06.2017 அன்று பூர்வாங்கக் கிரிகைகளுடன் ஆரம்பித்து கண்ணபிரானுக்கு அலங்காரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  23.06.2017 இன்று முதலாம் திருவிழா முருகம்மா வயிரமுத்து குடும்பத்தினரால் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது. பெருமாள்  அலங்கரிக்கப்பட்டு உள்வீதி வலம்வரும் போது  பக்திப் பாடல் பரவசமூட்டுவதாய் அமைந்திருந்தது.  4ம் நாள் திருவிழா க.நவரெத்தினராசா குடும்பத்தினராலும், 5ம் நாள் திருவிழா ஆ.புஸ்பராசா குடும்பத்தினராலும்  முன்னோரு போதும் இல்லாதவாறு மந்திர உற்சாடனங்கள், சோடனைகள், பஜனைப் பாடல்கள், தீபம் எடுத்துச் செல்லல் என பல்வேறு வகையில் சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெற்றன.  இத்திருவிழாக்கள் வேதவாகம குருமணி, கிரியா சர்மா, சாகரர் வித்தியா சிரோன்மணி சிவஸ்ரீ மயூரவதனன் குருக்கள் அவர்களால் மிகவும் தத்துவரூபமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  திருவிழா இடம்பெற முன்னர் பஜனைகள், கதாப்பிரசங்கம் என்பன  ஆலயத்தில் இடம்பெற்றது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பெரும் திரளான மக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து பெருமாளை வழிபட்டமையை படங்களில் காணலாம். அத்துடன் பூசை முடிவுற்றதும் மழை பெய்தமையும் வியக்கத்தக்க அம்சமாகக் காணப்படுகின்றது. இன்று 28.06.2017 புதன்கிழமை சி.சதானந்ததம் குடும்பத்தினரின் பூசை இடம்பெறவிருக்கின்றது.


















Post a Comment

0 Comments