Home » » பிள்ளையானை விடுதலை செய்வதாக உறுதியளித்த மஹிந்த!

பிள்ளையானை விடுதலை செய்வதாக உறுதியளித்த மஹிந்த!

பிள்­ளை­யானை விடு­தலை செய்வேன் என்று கூறும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சியல் அரு­வெ­றுக்கத்தக்­கது அமைச்சர் அஜித் மன்­னம்­பெ­ரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில்,
சஜித் பிரே­ம­தாச விவாதம் பற்றி தனிப்­பட்ட ரீதி­யிலும் நாமும் பல சந்­தர்ப்­பங்­களில் அவ­ருக்கு நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். 
எனினும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இதற்கு தனிப்­பட்ட ரீதியில் எவ்­வி­த­மான பதி­லையும் கூற­வில்லை. 
விவா­தத்தில் பங்­கு­பற்ற முடியும் என்றால் முடியும் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் அவர் பகி­ரங்­க­மாகக் கூற வேண்டும்.
இந்த விவா­தத்தில் கலந்து கொள்­வதில் என்ன பிரச்­சினை? ஏன் அவர் இதனை புறக்­க­ணிக்­கிறார். அவ­ருக்கு உடல் நலக்­கு­றைவு என்று கூறினால் பிர­தான வேட்­பா­ள­ருக்கு உடல் நலம் சரி­யில்லை என்­பதால் இந்த விவா­தத்தை கைவிட நாம் தீர்­மா­னிக்­கலாம்.
கோத்­த­பா­யவின் கடந்­த ­கால, நிகழ்­கால மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் பற்றி உண்­மையைக் கூறினால் அவர் தோல்­வி­ய­டை­வது உறு­தி­யாகும்.
எனவே கோத்­த­பாய ராஜ­பக்ஷவை தேர்­தலில் வெற்றி பெறச் செய்­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷ எதையும் செய்­வ­தற்கு தயங்க மாட்டார். இதனால் தான் சிறைச்­சா­லைக்குச் சென்று பிள்­ளை­யானை சந்­தித்து தமக்கு ஆத­ர­வ­ளித்தால் விடு­தலை பெற முடியும் என்று கூறி­யி­ருக்­கிறார். 
ஜன­நா­யக ரீதி­யான தலை­வ­ராகக் காணப்­பட்ட ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை­யுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டி­லேயே பிள்­ளையான் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார். 
சக நாடாளு­மன்ற உறுப்­பி­னரின் கொலை குற்­றத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பரை தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக விடுவிப்பதாகக் கூறும் மஹிந்த, கோத்தாவிடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்?
இது வெறுமனே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல. 
பிள்ளையானை விடுவிப்பதாக மஹிந்த வழங்கியுள்ள வாக்குறுதி மிகப் பாரதூரமான தாகும். இது வெட்கப்பட வேண்டிய விட யமாகும். 
எனவே நாட்டிலுள்ள சகல மக்களும் மஹிந்த குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனித படுகொலை யுடன் தொடர்புடைய சந்தேகநபரை விடு விப்பதாகக் கூறும் மஹிந்தவின் அரசியல் அருவெறுக்கத் தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |