தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, இந்நிலையில் மாத்தறை நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன் பாரிய முதலைகள் வந்துள்ளமையால் அவதானத்துடன் செயற்படுமாறு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முதலைகளின் எண்ணிக்கைகளை சரியான முறையில் கணக்கிட முடியாதெனவும், வெள்ள நீரில் குறைந்த போதிலும் நீரில் இறங்குவதனை தவிர்க்குமாறு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
வெள்ள நீர் குறையும் போது மீண்டும் முதலைகள் கங்கைகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளமையினால் வனவிலங்கு அதிகாரிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவிர வெள்ள நீரை பார்வையிடுவதற்கு வரும் பலர் நீரில் இறங்குவதாகவும் இதன்போது முதலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
0 comments: