சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதியொருவர் மட்டக்களப்பு பதுளை வீதிப் பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம்சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதியொருவர் மட்டக்களப்பு –ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை வீதிப் பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ளார்.இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு-பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போஹொல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி நிலையம் ஏக காலத்தில் சுமார் 100 அலுவலர்கள் பயிற்சி பெறக் கூடியதாகவும், அதேவேளை சுமார் 40 பேர் வதிவிடப் பயிற்சிகளைப் பெறக் கூடியதாகவும் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது. கடைசியாக அந்தப் பண்ணையில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
கடந்த ஆண்டு 2016 ஓக்ரோபெர் 24ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் கட்டிட நிர்மாண வேலைகள் 10 மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயிற்சி நிலையம் இயங்கத் துவங்கும் என்று கூறியிருந்தார்.
ஆதற்கு அமைய குறித்த பயிற்சி நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டதுடன் பயிற்சிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

0 Comments