(எச்.எம்.எம்.பர்ஸான்)க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நடத்தும் உத்தியோகத்தர்களின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசுறும் நடவடிக்கைகள் வாழைச்சேனை பிரதேச பாடசாலைகளில் சனிக்கிழமை (27) இடம்பெற்றன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, புகை விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நெளஷாத் அவர்களின் மேற்பார்வையில் புகை விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments