Home » » சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தல்..!!

சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தல்..!!

 


பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், பொலிஸ் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்று பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சட்டத்துறை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டத்துறை மாணவர் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த விடயம் சட்டத்தினமடிப்படையில் வலுவாக கையாளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |