Home » » அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அரிசி, பெரியவெங்காயம், ரின் மீன், பால்மா, நெத்தலி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவின குழுக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலைகளை குறைக்குமாறு ஆலோசனை வழங்கியதாக கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ நாட்டரசி 74 ரூபாவிற்கும் ஒரு கிலோ சிவப்பு அரிசி 75 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா அரிசி 84 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. கைக்குத்தல் அரிசிக்கு உயர்ந்த பட்ச கிராக்கி நிலவுகிறது. இந்த வகை அரிசி ஒரு கிலோ 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெத்தலி 535 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 125 ரூபாவாகும். ஒரு கிலோ உள்நாட்டு உருளைக் கிழக்கு 130 ரூபாவாகும். ஒரு கிலோ சீனியின் விலை 107 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பு 152 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. ஒரு கிலோ கோதுமை மா 86 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
இவற்றை சதொச கிளைகள் ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்யலாம். இவற்றின் ஊடாக மீன், தேங்காய் போன்றவற்றையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நாடெங்கிலும் 370 சதொச கிளைகள் இயங்குகின்றன. விரைவில் 30 கிளைகள் புதிதாக திறக்கப்படும் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |