கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமானது சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கவே அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக 44 ஆயிரம் வரையான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைக்க எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு இடையே இந்த வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: