Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2022 சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகும் காலப்பகுதி தொடர்பான அறிவிப்பு

 


27-11-2022



2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதரப் பத்திர சாதாரணத் தரப்பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதில், குறித்த பரீட்சைகள் அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன.

இந்தமுறை சாதாராணத் தரப் பெறுபேறுகளின் படி, 74 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments