அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பெட்மின்டன் சம்மேளனம் , கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை , கிழக்கு மாகாண திறந்த பெட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தேசிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 13 முதல் 18 வரை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மேற்படி சாம்பியன்ஷிப் போட்டியில் 13 , 15 , 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான தனிநபர், இரட்டையர்கள் ஆட்டம், கனிஸ்ட பிரிவிற்குட்பட்ட இருபாலாருக்குமான கலப்பு இரட்டையர் ஆட்டம் , 30 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட இரு பாலாருக்குமான கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆகியன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் , தேசிய மட்டத்தில் சம்பியன்களாகவும் , இரண்டாம் இடத்திற்கும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ் , கிண்ணம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு சுற்றுப் போட்டி பணிப்பாளர் அலியார் பைஸரை 0776078706 தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: