நாட்டின் சில பகுதியில் இன்று(30) மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வறட்சியுடனான வானிலையால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
84,681 குடும்பங்களைச் சேர்ந்த 291,804 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது
0 comments: