Home » » மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கு (தேசிய பாடசாலை) நிரந்தர அதிபர் நியமனம்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கு (தேசிய பாடசாலை) நிரந்தர அதிபர் நியமனம்

 


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது இன்று (15.08.2023) இலங்கை கல்வி நிருவாக சேவையை சேர்ந்த திரு. அன்ரன் பெனடிக் யோசப் அவர்களுக்கு இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கல்லுாரி அதிபராக கடமையாற்றியிருந்த திரு. பயஸ் ஆனந்தராஜா அவர்கள் கடந்த வருடம்(2022) டிசம்பர் 30 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் பிரபாகரன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டடிருந்தார்.
இதே வேளை கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுகான விண்ணப்பங்கள் கோரப்பட்டு யுலை 21 ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான திரு.அன்ரன் பெனடிக் யோசப் அவர்கள் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டவர். இவர் தனது பாடசாலை, பல்கலைக்கழக காலங்களில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்ததுடன் மும்மொழிச் தேர்ச்சியும் பெற்றவர் என்பதோடு பட்டப்படிப்பின் பின்னர் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிருவாக துறையில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர்.

மேலும் கல்வி நிருவாக சேவை நியமனத்தில் முதன்மை நிருவாகிய தெரிவு செய்யப்பட்டர் என்பதோடு தற்போது வடமத்திய மாகாண அனுராதபுரம் கல்வி வலயத்திற்கான நிருவாக பணிப்பாளராக கடமையாற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணிப் பாடசாலையாக கருதப்படும் புனித மிக்கேல் கல்லுாரிக்கு நீண்ட காலம் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாமல் இருந்தது அதன் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமே என மட்டக்களப்பு மக்கள் அஞ்சியிருந்த நிலையில் இன்று கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நியமனம் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |