Advertisement

Responsive Advertisement

மாவீரர்தினத்தை அனுசரிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்! – யோகராஜன் எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை.

அரசாங்கம் யுத்த வெற்றி விழாவாக கொண்டாடும் 19ஆம் திகதியை யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறும் அஞ்சலி செலுத்தும் தினமாக அரசாங்கம் பிரகடனம் செய்ய வேண்டுமென ஐ.தே.கட்சி எம்.பி ஆர். யோகராஜன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாத்தின்போதே ஆர். யோகராஜன் எம்.பி இதனைத் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை. வடக்கில் பல காலம் மாவீரர் தினம் நினைவு கூரப்படுகின்றது. ஆனால் அரசு எதிர்க்கின்றது ஏன்? மக்களை பிரித்து தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கேயாகும். யார் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர் என சிந்தியுங்கள்? உயிரிழந்தவர்களையே உறவினர் அனுஷ்டிக்கின்றனர். போராளிகளாகட்டும் சாதாரண மக்களாகட்டு மரணித்தவர்களையே நினைவு கூருகின்றனர்.
கொலைகாரன் ஆகட்டும் தூக்கிலிடப்பட்டவர் ஆகட்டும், தூக்கிட்டு மரணமான பின்னர் இறுதிக் கடமைகளை செய்வதற்கு பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்படும். நான் பயங்கரவாதம் தொடர்பாக பேசவில்லை. பலாத்காரமாக புலிகள் இயக்கத்தின் இணைத்துக் கொள்ளப்பட்டவரொருவர் மரணித்தால் நினைவு கூற, இறுதிச் சடங்குகளை நடத்த இடமளிக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments