Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் எச்ஐவி பாதிப்பு இந்த ஆண்டில் கணிசமாக அதிகரிப்பு! – இதுவரை எயிட்ஸ்சுக்கு 307 பேர் பலி.

எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில் இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங் காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார். அவர்களிடயே எயிட்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டோர் 432 பேர் இருப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் பீ. ஹெரிசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது - 2010ல் 121 எச்.ஐ.வி. நோயாளர்களும் 2011ல் 146 பேரும் 2012ல் 186 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
2010ல் 44 பெண்களும் 77 ஆண்களும் அடையாளங்காணப்பட்டதோடு 2011ல் 64 பெண்களும் 82 ஆண்களும் அடையாளங் காணப்பட்டனர். 2012ல் 66 பெண்களும் 120 ஆண்களும் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியது அடையாளங் காணப்பட்டனர். கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே கூடுதலான எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுவது குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments